Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd February 2021 17:55:17 Hours

"நாங்கள் அனைவரும் ஒரு தேசிய நோக்கத்திற்காக கடமைப்பட்டுள்ள நிலையில், உங்கள் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது.”

கொவிட் -19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள், இன்று 20 ஆம் திகதி இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு குறிப்பிடுகையில், பங்குதாரர்களுடன் இணைந்து நாட்டில் கொவிட் - 19 பரவலை தடுக்கும் பணியில் ஈடுபடும் பொது சுகாதார பரிசோதகர்களின் தனித்துவமான வகிபாகத்தினை பாராட்டினார்.

‘’நீங்கள் அனைவரும் ஒரு தேசிய காரணத்திற்காக அர்ப்பணித்துள்ளீர்கள், உங்களின் அயராத அர்பணிப்பிற்கு அதிமேதகு ஜனாதிபதி மற்றும் பிரதமர் மற்றும் அரசாங்கம் பாராட்டு தெரிவிக்கிறார்கள்.

சவால்கள் மற்றும் குறைபாடுகளை எதிர்கொண்டு நாட்டை ஒரே இலக்கை நோக்கி கொண்டு செல்வதற்கான எங்களது அர்ப்பணிப்புக்காக இராணுவம், விமானப்படை, கடற்படை மற்றும் காவல்துறை பணியாளர்களையும், அனைத்து தரப்பு சுகாதார பணியாளர்களையும் அவர்கள் பராட்டினர்.

தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள படைகள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும் உங்கள் சிறந்த ஒத்துழைப்பை வழங்குவதில் நீங்கள் முன்மாதிரியாக இருந்தீர்கள். உங்களது அசைக்க முடியாத பாத்திரங்களுக்கு எனது நன்றியுணர்வை தனிப்பட்ட முறையில் வெளிப்படுத்துவதாக தெரிவித்த இராணுவத் தளபதி , பொது சுகாதார பரிசோதகர்களின் தேவைகள் மற்றும் அவர்கள் அளித்த கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் குறித்தும் விசாரித்தார்.

அதே நேரத்தில், தளபதி கூறுகையில், வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை தொழில்நுட்ப ரீதியாகவும் தொழில்துறை ரீதியாகவும் மேற்கொள்ளும் பணியை ஆயுதப்படைகள் மேற்கொள்கின்றன. இந்த தேசிய பணியில் சமூகத்துடன் நேரடியாக ஈடுபடும் பொது சுகாதார பரிசோதகர்களின் தொழில்சார் அறிவும் அனுபவமும் மிக முக்கியமானது என்றும், ஆயுதப்படைகளுடன் ஒருங்கிணைந்து, பேரழிவைத் தடுப்பதில் இதுவரை முன்னேற்றம் காண முடிந்தது என்றும் தளபதி சுட்டிக்காட்டினார்.

பொது சுகாதார அதிகாரிகளின் கடின சேவையை குறிப்ட்ட தளபதி அவர்களுக்கான சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக அவர் உறுதியளித்தார், மேலும் அவர்களின் தொழில்முறை தேவைகள், தொழில்நுட்ப உதவி மற்றும் மூலோபாய உத்திகள் பொதுமக்களின் சேவையில் மிக முக்கியமானவை என்றும் கூறினார். உங்களது கருத்துக்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தும் போது சில சந்தர்பங்களில் அக்கருத்துக்கள் வெவ்வேறு வழிகளில் திரிபடைய முடியும் என்பதனாலும் இது மதிப்புமிக்க மற்றும் அர்த்தமுள்ள சேவைக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் என்பதாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் என்றும் குறிப்பிட்டார்.

கூட்டத்தில் உரையாற்றிய கோவிட் -19 பரவுவதைத் தடுக்கும் தேசிய மையத்தின் தலைவர், கடந்த சில வாரங்களில் நாளொன்றுக்கு சுமார் 900 நோயாளிகள் பதிவாகியிருந்தாலும், தற்பெழுது தினமும் சுமார் 500 நோயாளிகள் பதிவாகியுள்ளனர் என்பது வைரஸ் ஓரளவிற்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதனை காட்டுகிறது என குறிப்பிட்ட அவர் தங்களது உபாயங்களை தொடர்ந்தும் மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மாவட்ட கொவிட் தடுப்பு ஒருங்கினைப்பாளருடன் இணைந்துசெயற்படுமாறும் அனைத்து பொது சுகாதார பரிசோதகர்களிடமும் வேண்டுகோள் விடுத்தார்.

அங்கு கூட்டத்தில் கலந்துகொண்ட இரண்டு பொது சுகாதார பரிசோதகர்கள் தொடர்ச்சியான கட்டுப்பாட்டு முயற்சிகளைப் பாராட்டியதுடன் அந்த இடத்திற்கு அவர்கள் வருகை தருவதற்கு மற்றும் வசதியளித்து அவர்களின் கருத்துக்களை செவிமடுத்தமைக்கு இராணுவத் தளபதிக்கு நன்றி தெரிவித்தனர்.

கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவராக உங்கள் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது, மேலும் வெளிப்படையாக உங்களை மேலும் நம்புகிறோம், மேலும் இந்த தொற்றுநோயை அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து நெருக்கமாக ஒழிப்பதே எங்கள் உறுதியான நோக்கம் " என்று பொது சுகாதார பரிசோதக சங்கத்தின் தலைவர் திரு எம்.ஜி.உபுல் ரோஹான அன்றைய மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார். ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் ஒவ்வொருவருக்கும் நினைவு பரிசுகளை வழங்கினார்.

ஏறக்குறைய இரண்டு மணி நேரம் நீடித்த இந்த கூட்டத்தில் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ஹேரத், கேணல் டொக்டர் சவின் சமகே, பொது சுகாதார பரிசோதக சங்கத்தின் தலைவர் திரு எம்.ஜி.உபுல் ரோஹன மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.Best jordan Sneakers | Nike Air Max 270