Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th February 2021 08:56:08 Hours

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பொது பட்டமளிப்பு நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் ஏனைய துறைகளுக்கான உயர்ந்த கல்வி நிலையமான ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 31 ஆவது பொது பட்டமளிப்பு விழா -2020 செவ்வாய்க்கிழமை 16 ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு முப்படை சேனாதிபதியும் அதிமேதகு ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷ, அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் பாதுகாப்பு அமைச்சு மற்றும் தேசிய பாதுகாப்பு உள் நாட்டு அலுவல்கள் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன , பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜெனரல் (ஓய்வு) ஜெரார்ட் ஹெக்டர் டி சில்வா, பிரதமரின் பாரியார் திருமதி ஷிராந்தி ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சித்ராணி குணரத்ன மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி தலைவர் திருமதி சுஜீவா நெல்சன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொண்டனர்.

கொவிட் 19 சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் காரணமாக ஆறு கட்டங்களின் கீழ் நடைபெற்ற இந்த பட்டமளிப்பில் 1379 பேர் முதுநிலை மற்றும் இளங்கலை பட்டங்களை பெற்றுக் கொண்டதோடு 5 பேர் தத்துவமானி (PhD) பட்டத்தை பெற்றுக் கொண்டனர். மருத்துவர்கள் (பிஎச்.டி), மேலும் அங்கு 263 பட்டப் பின் படிப்பு டிப்ளோமாக்கள் மற்றும் 1211 இளமானி பட்டங்களும் வழங்கப்பட்டன.

இந்த ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறந்த இராணுவ அதிகாரிக்கான விருதை 2 ம் லெப்டினன்ட் ஆர்.எம்.டி.பி ரத்நாயக்க பெற்றுக் கொண்டார். சிறந்த கடற்படை அதிகாரிக்கான விருதை லெப்டினன்ட் வி.எஸ். பலிஹவதன மற்றும் சிறந்த விமானபடை அதிகாரிக்கான விருதை பிளையிங் அதிகாரி ஆர்.ஜி.எஸ்.டி கமகே ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய அதிமேதகு ஜனாதிபதி, தற்போதைய தொற்றுநோய்களுக்கு மத்தியில் மாற்றங்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் பல்கலைக்கழக கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கினார்.

"நாங்கள் பின்தங்கியிருக்க முடியாது. நமது உயர் கல்வி முறை விரைவாக மாற்றியமைக்கப்பட வேண்டும். வேகமாக மாறும் சூழ்நிலைகளுக்கு பொருத்தமானதான கல்வியை வழங்க வேண்டும் அது அவர்களுக்கு எதிர்காலத்தில் வேலைவாய்ப்பைக் தேர்ந்தெடுக்க உதவும். எங்கள் பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற உயர் கல்வி நிறுவனங்களில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என ஜனாதிபதி கூறினார்.

உப வேந்தர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) மிலிந்த பீரிஸ், விரிவுரையாளர்கள், சிரேஸ்ட முப்படை அதிகாரிகள் மற்றும் பெற்றோர் நிகழ்வில் கலந்துக் கொண்டனர். Nike air jordan Sneakers | Nike Running