Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th February 2021 13:27:42 Hours

ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகள் தொடர்பில் தேசிய பாதுகாப்பு கற்கைகள் தொடர்பிலான நிறுவனத்தில் அமர்வில் ஆராய்வு

பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கிவரும் தேசிய பாதுகாப்பு கற்கைகள் தொடர்பிலான ‘திங்க் டேன்க்’ தேசிய கற்கைகள் நிறுவனத்தினால் எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் தொடர்பிலான இரவு நேர கலந்துரையாடல் ஒன்று திங்கட்கிழமை (08) ரங்கல்ல கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக பாதுகாப்பு அமைச்சு மற்றும் தேசிய பாதுகாப்பு உள்நாட்டு அலுவல்கள் அனர்த்த முகாமைத்திவ இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன அழைக்கப்பட்டிருந்ததுடன் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, விமானப் படை, கடற் படைத் தளபதிகளும் பாதுகாப்பு துறை நிபுணர்களும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரும் பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமுமான அத்மிரல் (பேராசிரியர்) ஜெயநாத் கொலம்பகே வரவேற்புரை நிகழ்த்திய பின்னர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்னவால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது.

அதனையடுத்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் வரைவுகள் தொடர்பில் இந்நிகழ்வில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் அத்மிரல் (பேராசிரியர்) ஜெயநாத் கொலம்பகே, சர்வதேச நீதி கட்டடைப்புகள் தொடர்பாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் முன்னாள் ஆலோசகர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைகான முன்னாள் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பேராசிரியர் ரொஹான் பெரேரா, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களின் தாக்கங்கள் இந்த தீர்மானங்களிலிருந்து விலகுவதன் விளைவுகள் மற்றும் இலங்கையின் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விரிவுரையினை பாத் பைண்டர் அறக்கட்டளையின் தவிசாளரும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் முன்னாள் செயலாளருமான பேர்ணாட் குணதிலக, இலங்கைக்கு பரிந்துரைக்கப்பட்ட வழிமுறைகள்’ தொடர்பிலான விரிவுரை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் முன்னாள் செயலாளரும் முன்னாள் வட.மாகாண ஆளுநருமான எச்.எம்.ஜி.எஸ்.பலிஹக்காரவாலும் நிகழ்த்தப்பட்டது.

அதனையடுத்து இந்த அமர்வுகளில் பங்கேற்று பயன் பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் தகவல் தொடர்பு மற்றும் வெளியீடுகள் பணிப்பாளர் ரியர் அட்மிரல் திமுத்து குணவர்தன நன்றி உரையினை நிகழ்த்தினார்.

அதேநேரம் தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனம் (ஐ.என்.எஸ்.எஸ்) என்பது பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள இலங்கையின் முதன்மையான தேசிய பாதுகாப்பு சிந்தனைக் குழுவாகும் என்பதுடன், இது பாதுகாப்புச் சூழலைப் புரிந்துகொள்வதற்கும், சான்றுகள் அடிப்படையிலான கொள்கை மற்றும் விவாதங்கள் , விவாதங்களுக்கான உத்திகளை உருவாக்குவதற்கும் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவதற்கும் நிறுவப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். Sports brands | UK Trainer News & Releases