Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th January 2021 20:25:01 Hours

முக கவசங்கள் மற்றும் விரைவான என்டிஜன் சோதனை கருவிகள் நன்கொடை

கொவிட் 19 க்கு எதிரான போராட்டத்தில் முப்படை படை வீரர்களின் ஒப்பிட முடியாத பாத்திரங்களை பாராட்டி IME கொரியா மற்றும் எஸ்டி பயோசென்சர் நிறுவனங்கள் தங்கள் உள்ளூர் நண்பரகள் மூலம் இன்று பிற்பகல் (18) இராணுவத் தளபதியினை அவரது அலுவலகத்தில் சந்தித்து கொவிட் 19 தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள படைவீரர்களின் பயன்பாடு கருதி முக கவசங்கள் மற்றும் விரைவான என்டிஜன் சோதனைக் கருவிகளை நன்கொடையாக வழங்கினர்.

பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் - 19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் கொரிய சியோலில் உள்ள இலங்கை தூதரகம் மேற்கொண்ட முயற்சிக்கு பலனாக உலகளாவிய வைரஸ் நோயறிதல் தேவைகளை கையாளும் இரு நிறுவனங்களும் நன்கொடையாக ரூ .25 மில்லியன் மதிப்புடைய 8,000 முக கவசங்கள் மற்றும் 10,000 விரைவான என்டிஜென் சோதனைக் கருவிகளை வழங்கினர்.

ஜெனரல் ஷவேந்திர சில்வா ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவ தலைமையகத்தில் நன்கொடைகளை ஏற்றுக் கொண்டார். அத்தோடு கொவிட் -19 பரவலிற்கு எதிராக முப்படையினரின் பங்கிற்காக நன்கொடையாளர்களின் சிந்தனை பாராட்டினார்,

அந்த கொரிய நிறுவனங்களின் உள்ளூர் பங்குதார்களான சீக் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் பணுப்பாளர் திரு வார்ரிக் எஸ்சிஓ, சீக் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் இலங்கைக்கான முகாமையாளர் திரு ரூமேஷ் உபயசிரி, மற்றும் சீக் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் உதவி முகாமையாளர் திரு உதர சேனாநாயக்க ஆகியோர் இராணுவத் தளபதியுடனான சந்திப்பில் கலந்து கொண்டனர்.

சந்திப்பின் போது ஜெனரல் சவேந்திர சில்வா இரவு பகல் பொருட்படுத்தாமல் கொவிட் தடுப்பு நடவடிக்கைகளில் படையினர் மற்றும் சுகாதார ஊழியர்கள் தொடர்ச்சியாக செயல்படுத்தப்படும் விதம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை விளக்கினார். affiliate link trace | Nike