Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th December 2020 22:52:43 Hours

முப்டை சேனாதிபதி அதிமேதகு ஜனாதிபதியினால் இராணுவத் தளபதியை நான்கு நட்சத்திர நிலையான ஜெனரல் நிலைக்கு உயர்வு

முப்படை சேனாதிபதி அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, தற்போதைய பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் எல் எச் எஸ் சி சில்வா டபிள்யூடபிள்யூவி ஆர்டபிள்யூபி ஆர்எஸ்பி விஎஸ்வி யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி. நான்கு நட்சத்திர ஜெனரல் நிலைக்கு திங்கள் (டிசம்பர் 28, 2020) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நிலை உயர்த்தப்பட்ள்ளார். இது தேசத்திற்கு அவரது தன்னலமற்ற சேவைகளை அங்கீகரிப்பதாக கருதப்படுகிறது. இந்நிலைக்கு முன்னராக இவர் மூன்று நட்சத்திர லெப்டினன்ட் ஜெனரல் நிலையில் இருந்தார்.

ஜெனரல் ஷவேந்திர சில்வா மதிப்புமிக்க கஜபா படை மற்றும் விஷேட படை ஆகியவற்றின் படைத் தளபதியாகவும் பதவி வகிப்பதோடு ஜனாதிபதியால் கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர் பரவலாக அனைவராலும் பாராட்டும் நபராக மாறினார். ஜெனரல் சில்வாவின் பல்முக திறமை மற்றும் ஆற்றல் மிக்க தலைமைத்துவம் குணாதிசயங்கள், நிரூபிக்கப்பட்ட திறன்கள், 24 மணிநேர கொவிட் 19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு மற்றும் அனைத்து தனிமைப்படுத்தல் செயல்பாட்டு பொறிமுறை பெரிதும் பாராட்டப்படுகின்றன.

ஒரு தனித்துவமான் இராணுவத் தளபதியாக, அவரது போர்க்கள வலிமை மே 2009 க்கு முன்னர் மனிதாபமற்ற போரின் நிறைவு மீது பெரும் தாக்கம் செலுத்தியது. சமாதானத்திற்கான இறுதிக் கட்ட போரில் ஒரு அசாதாரண பெரும் தலைவராக ஜெனரல் சில்வா தனது உயிராபத்திற்கு மத்தியில் படையினரின் பாதுகாப்பு மற்றும் விநியோக என்பவற்றை தடையின்றி பராமரித்தல் என்பன வெற்றிக்கு பெரும் பங்காற்றியது.

பலரால் பெரிதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜெனரல் ஷவேந்திர சில்வா அமெரிக்க இராணுவத்தின் ஜெனரல் நார்மன் ஸ்வார்ஸ்கோப்பின் "ஆண்களை போருக்கு உத்தரவிட ஒரு ஹீரோவை எடுக்கவில்லை, ஆனால் அந்த மனிதர்களில் ஒருவராக இருக்க ஒரு ஹீரோவை எடுத்துக்கொள்கினறனர்" என்ற கூற்றுக்கு மிகப்பொருத்தமானவர் ஆகின்றார். மிகச் சமீபத்திய வரலாற்றின் கண்ணோட்டத்தில், அவர் போர்க்களத்தில் நிகரற்ற முக்கிய போர்வீரர்களில் ஒருவராக திகழ்கின்றார்., மேலும் மிக உயர்ந்த தீர்மானங்கள் சரியான நேரத்தில் பயன்படுத்துவதன் மூலம் அவர் செய்த சாதனைகள் அவரது சமகாலத்தவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இராணுவ பதவி நிலை பிரதானியாக சேவையாற்றிய போது லெப்டினன்ட் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டு 2019 ஆகஸ்ட் மாதம் 18 ம் திகதி இலங்கை இராணுவத்தின் 23 வது தளபதியாக நியமிக்கப்பட்டார். லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆறு மாதங்கள் அப்பதவி வகிக்கையில் அதிமேதகு ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ அவர்களால் 2020 ஜனவரி மாதம் 02 ம் திகதி முப்படைகளின் உயர் அலுவலகத்தின் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியாக நியமிக்கப்பட்டார்.

தேசத்தின் பாதுகாவலர்களான இலங்கை இராணுவம் மிகப்பெரிய மனித வளத்தினை கொண்ட அமைப்பு என்ற வகையில் நாடளாவிய ரீதியில் துரு மிதுரு நவ ரட்டக் எனும் நிழ்ச்சி திட்டத்தின் கீழ் மரக்கன்று நடுதல், நீண்ட காலம் தாமதமாகியிருந்த ஐந்து இலக்கங்களுக்கும் அதிகமான அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் நிலை உயர்வு, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் சர்வதேச தரத்தில் ஐ.நா.விற்கு அதிநவீன யுனிபஃபெல்ஸ் கனரக வாகனங்கள், சைபர் பாதுகாப்பு தேவைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம், கொவிட் -19 கட்ப்படுத்தலின் பாத்திரங்கள், போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிரான தேசிய செற்பாட்டிற்கான அர்ப்பணிப்பு, உட்கட்டமைப்பு மேம்பாடு அனைத்து இராணுவ அமைப்புக்களின் விளையாட்டு முன்னேற்றத்திற்கு பங்களிப்பு, பால் பொருட்கள், அரிசி, காய்கறிகள் மற்றும் முட்டை போன்ற தினசரி இராணுவ அத்தியாவசிய தேவைகளை சுய உற்பத்தியாக மேற்கொள்ளல், விவசாய நோக்கங்களுக்கான புதிய குளங்களை உருவாக்கல், பாடசாலை மற்றும் பொது கட்டிடங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் போன்றவை புனரமைத்தல் மற்றும் உருவாக்கல், இடர் முகாமைத்துவம் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள், சட்ட அமுலாக்க பிரிவுகளுடன் ஒருங்கிணைத்தல் அனைத்து பாதுகாப்பு படைத் தலைமையக மட்டங்களிலும் காடு வளர்ப்பு மற்றும் மறு காடு வளர்ப்பு முயற்சிகள், நலன்புரி நடவடிக்கைகளாக வீடற்றோருக்கான வீடுகளை பொது ஆதரவுடன் அமைத்தல், படைவீரர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அனைத்து படையினரின் சிறப்பு கவனிப்பு திட்டங்கள் அறிமுகம், படையினருக்கான புதிய வைத்தியசாலைகள் கட்டுமானங்கள் போன்றவை ஜெனரல் ஷவேந்திர சில்வா இதுவரை நிறுவனத்திற்கு வழங்கிய மிகச் சிறந்த சில திட்டங்களாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, தேசிய பாதுகாப்பு மற்றும் அமைப்பின் முன்னோக்கி அணிவகுப்பை உறுதி செய்வதற்காக இப்போது வெளியிடப்பட்ட '2020-2025 ஆம் ஆண்டிற்கான இராணுவத்தின் முன்னோக்கி மூலோபாயம்' என்பது ஆவணப்படுத்தப்பட்ட மூலோபாய அணுகுமுறையாக அதிகாரிகள் மற்றும் படையினருக்கு நம்பிக்கையின் ஒரு கலங்கரை விளக்கமாக விளங்குகிறது.

இராணுவத்தின் பதவி நிலை பிரதானியாக பதவியேற்பதற்கு முன்னர், அவர் இராணுவத் தலைமையகம் நிறைவேற்று பணிப்பாளர் நாயகமாக பணியாற்றினார். இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பெருமைமிக்க தயாரிப்பாக, 1984 மார்ச் மாதம் 5ம் திகதி இராணுவத்தின் நிரந்தர படையின் பாடநெறி 19 இல் இணைந்துக் கொண்டார்., தனது பாடசாலை வாழ்வில் புனித தோமஸ் கல்லூரியில் முதல் 11 கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்தார். கல்லூரியின் மாணவச் சிப்பாய் குழு , மாணவச் சிப்பாய் பேண்ட் குழு என்பவற்றின் அங்கத்தவராகவும் கல்லூரியின் சிரேஸ்ட மாணவத் தலைவனாகவும் செயற்பட்டுள்ளார்.

இவர் இராணுவ எகடமி பயிற்சி நிறைவின் பின்னர் 1985 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி கஜபா படையணிக்கு உட்புகுத்தப்பட்டார். பின்னர் 1 ஆவது கஜபா படையணியின் கட்டளை அதிகாரியாகவும், பிளட்டுன் கொமாண்டராகவும், விஷேட சேவைக் குழுவிலும் , விரைவாக செயற்படும் படையணி (RDF) அதாவது தற்போதைய விஷேட படையணியிலும் கடமைகளை வகித்துள்ளார்.

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி) மற்றும் பல வெளிநாட்டு பாதுகாப்பு கல்லூரிகளில் (பி.எஸ்.சி) பட்டம் பெற்ற இராணுவத்தின் முதல் தளபதி என்ற பெருமையை ஜெனரல் ஷவேந்திர சில்வா பெற்றுள்ளார். பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி சமீபத்தில் அவரது கல்வி சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் இராணுவத் தளபதியின் புகைப்படத்தை ‘Wall of Fame’ பெருமையின் சுவர் எனும் பெயரில் தான் தயாரித்த முதல் இராணுவத் தளபதியாக வெளியிட்டது.

லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இராணுவத்தில் சிறப்பு விருதுகளான வீர விக்ரம விபூஷணம் (WWV), ரண விக்ரம பதக்கம் (RWP), இரண சூரிய பதக்கம்(RSP), விசிஷ்ட சேவா விபூஷணம்(VSV) , மற்றும் உத்தம சேவா பதக்கம் (USP) போன்ற உயர் விருதுகளையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

இராணுவத்தில் 37 வருட சேவைகளை பூர்த்தியான நிலையில் இராணுவத்தில் உயர் பதவிகளான பதவிநிலை, வழிக்காட்டி, கட்டளை மற்றும் இராஜதந்திர நியமனங்கள் , இராணுவ திட்டமிடல் பணியகத்தின் பதவிநிலை 1 தரத்திலும், இராணுவ பயிற்சி பணியகத்தின் பதவிநிலை 1 தரத்திலும், யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் பதவிநிலை 1 தரத்திலும், இராணுவ செயலகத்தில் பதவிநிலை 1 தரத்திலும், நடவடிக்கை பணியகத்தின் பணிப்பாளர் நாயகமாகவும், நிறைவேற்று பணிப்பாளர் நாயகமாகவும் கடமை வகித்துள்ளார்.

இவர் இராணுவத்தில் இரண்டாம் லெப்டினன்ட் நிலையில் இருந்து மேஜர் ஜெனரல் வரையான நிலையில் இராணுவத்தில் அனைத்து முக்கிய பதவிகளையும் வகித்துள்ளார்.

இவர் 1991 ஆம் ஆண்டு இராணுவ நிரந்தர அதிகாரி பயிற்சி இல 37 கீழ் பயிற்சியை மேற்கொள்ளும் பிரதம பயிற்சி அதிகாரியாக இராணுவ கல்வியற் கல்லூரியில் இருந்தவேளையில் இந்த பயிற்சியில் வெளிநாட்டு பயிலிளவல் அதிகாரிகள் முதற் தடைவையாக இந்த பயிற்சியில் இணைந்து கொண்டனர். பின்னர் 2005 ஆம் ஆண்டு இராணுவ கல்வியற் கல்லூரியின் கட்டளை அதிகாரியாக இவர் விளங்கிய சந்தர்ப்பத்தில் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பயிலிளவல் அதிகாரிகள் பிரிவின் பல நூறு இராணுவ இளம் அதிகாரிகளை எமது நாட்டிற்கு உருவாக்கினார்.

எல்டிடிஈ பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொண்ட “வன்னி மனிதாபிமான நடவடிக்கைக்கு” 53 ஆவது படைப் பிரிவின் தளபதியாக தலைமை வகித்தார். இவர் பணிகளில் சிறந்த பங்களிப்பை மேற்கொண்டார். 200 கிலோ மீற்றர் தூரத்தை இவரது தலைமையில் பங்கரவாதிகளிடமிருந்து கைப்பற்றிக் கொண்டார். அத்துடன் புதுமாத்தளன் பிரதேசங்களிலிருந்து எல்டிடிஈ பயங்கரவாதிகளது பெருந் தொகை ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் 2009 ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்டன. மேலும் பல நூறு அப்பாவி பொது மக்களை தீவிரவாதிகளிடம் இருந்து பாதுகாத்தவர். இந்த வீரச்செயற்பாடுகளை கௌரவித்து இவரை இலங்கை இராணுவத்தின் மேஜர் ஜெனரல் நிலைக்கு பதவியுயர்த்தப்பட்டார்.

2010 ல், நியூயார்க் ஐக்கிய நாடுகளின் தூதராகவும் இலங்கைக்கான பிரதி நிரந்தர பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டார். இலங்கை வரலாற்றில் இலங்கையில் வெளியுறவு சேவைக்கு ‘தூதர்’ பதவிக்கு நியமிக்கப்பட்ட ஒரே இராணுவ அதிகாரி அவர். ஜெனரல் ஷவேந்திர சில்வா ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் பணிகள் தொடர்பான உயர் மட்ட ஆலோசனைக் குழுவிக்கு ஐ.நா. பொதுச்செயலாளரால் நியமிக்கப்பட்ட முதல் இலங்கை வீரர் ஆவார். அவரது சிறப்பான ஆலோசனைகளின் விளைவாக, அக்காலக் கட்டத்தில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினருக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டது. மேலும், உலகளாவிய பிராந்திய மோதல்கள் மற்றும் அமைதி காக்கும் விடயங்களைக் கையாண்ட ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அரசியல் மற்றும் காலனித்துவக் குழுவில் இலங்கையின் பிரதிநிதியாக அவர் நியமிக்கப்பட்டிருந்தார். இலங்கை விமானப்படை ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு இராணுவ வைத்தியசாலையை முறையே மத்திய ஆபிரிக்க குடியரசு மற்றும் தென் சூடானில் உள்ள ஐக்கிய நாடுகளின் தூதரகங்களில் நிறுவினார். (முடிவடைகிறது)trace affiliate link | Nike, adidas, Converse & More