Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th December 2020 21:00:41 Hours

தேசிய பாதுகாவல் படைத் தலைமையக புதிய பிரிவுகளும் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கலும்

இன்று காலை (27) இலங்கை தேசிய பாதுகாவலர் படையினர் குருநாகல் வேரஹேரவில் படைத் தலைமையகத்தின் புதிய கட்டுமானங்கள் திறந்து வைத்தல் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கல் என்பவற்றிக்கு பிரதம அதிதியாக வருகை தந்த பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் ஆகியோருக்கு அன்பான வரவேற்பு அளித்தனர்.

இந்நிகழ்ச்சியின் பிரதம விருந்தினரான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் அணிவகுப்பு மைதானத்தில் புதிதாக மைக்கப்பட்ட வளைவு தோரணத்தை திறந்து வைக்க அழைக்கப்பட்டார். இலங்கை தேசிய பாதுகாவலர் படையின் படைத் தளபதியும் இராணுவ செயலாளருமான மேஜர் ஜெனரல் ஜயசாந்த கமகே அவர்கள் அன்றைய தலைமை விருந்தினரை பிரதான நுழைவாயிலில் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் அடுத்தது படையணி நிதியில் புதிதாக அமைக்கப்பட்ட கடை தொகுதியினை வளாகத்தை மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா படையினரின் பாவனைக்கு வழங்கினார்.

பிறகு, அன்றைய பிரதம விருந்தினர் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சனுடன் இணைந்து இலங்கை தேசிய பாதுகாவலர் படையின் சேவை வனிதையர் பிரிவின் அனுசரணையுடன் இலங்கை தேசிய பாதுகாவலர் படை குடும்பங்களின் மொத்தம் 105 முன்பள்ளி சிறார்கள் மற்றும் மாணவர்களுக்கு ரூபா ஒரு மில்லியன் பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளித்தார். இதன் போது கொவிட் 19 தொற்றுநோய் காரணமாக சகல பயனாளிகளும் அழைக்கப்படவில்லை.

இலங்கை தேசிய பாதுகாவலர் படை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மனோஜ் பெர்னாண்டோ இலங்கை தேசிய பாதுகாவலர் படையின் படைத் தளபதியுடன் இணைந்து அன்றைய பிரதம விருந்தினர் மற்றும் திருமதி நெல்சன் ஆகியோரை வரவேற்றனர். நிலையத் தளபதி பிரிகேடியர் கே.எம்.திலகரத்ன வரவேற்புரை நிகழ்த்தினார்.

நாட்டின் சுகாதார நிலைமை காரணமாக ஒரு குறிப்பிட்ட சிலரை மட்டும் இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட்டிருந்தனர். அன்றைய பிரதம விருந்தினர் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, திருமதி சுஜீவா நெல்சன், மேஜர் ஜெனரல் ஜயசாந்த கமகே மற்றும் திருமதி மனோஜி பெர்னாண்டோ ஆகியோர் இணைந்து அடுத்த கல்வியாண்டிற்கான பரிசுப் பொதிகளை மற்றும் ஊக்கத்தொகையினை வழங்கினர். அவர்களில் 38 மாணவர்களின் தந்தையர் 2009 மே மாதத்திற்கு முன்னரான சமாதானத்திற்கான போரில் தனது தந்தையர்களை இழந்தவர்களும் இராணுவத்தில் பணிபுரியும் சிவில் ஊழியர்களின் 05 பிள்ளைகளும் அடங்குவர்.

ஒரு சில கலை நிகழ்ச்சிகள் இந்த நிகழ்வை வண்ணமயமாக்கியது அத்துடன் பிரதம அதிதி தனது உரையில் குறித்த பிள்ளைகளை நன்கு கற்றுக் எதிர்காலத்தில் நாட்டின் சிறந்த ஒழுக்கமான பிரஜைகளாக நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும் இராணுவத் தளபதி தனது உரையில் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது அவர்களின் பங்களிப்பைப் பாராட்டியதோடு தான் 58 படைப்பிரிவுக்கு கட்டளையிட்ட காலங்களில் இலங்கை தேசிய பாதுகாவலர் படையின் படையினரின் பங்களிப்பினை நினைவு கூர்ந்தார். இலங்கை தேசிய பாதுகாவலர் படையின் 37 அதிகாரிகள் மற்றும் 1221 சிப்பாய்களுக்கு அஞ்சலி செலுத்தினார். தற்போதைய படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயசாந்த கமகேவின் சேவைகளைப் பாராட்டிய அவர் புதிதாக அமைக்கப்பட்ட கட்டுமானங்களைப் பாராட்டினார். கடந்த 18 ஆண்டுகளாக படையணிகளுக்கிடையிலான அணிநடை மற்றும் ஜூடோ சாம்பியன்களாகவும் கடந்த 10 ஆண்டுகளாக கராத்தே சாம்பியனாகவும் மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகளில் மற்றும் துப்பாக்கிச் சூடு என்பவற்றின் அடைவுகளையும் பாராட்டினார். (முழு வீடியோவையும் கீழே காண்க)url clone | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ