Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th December 2020 21:26:46 Hours

ஐ.நா பயிற்சி தர நிலையினை மேலும் வலுப்படுத்திய குகுலேகங்கயிலுள்ள இராணுவ அமைதி ஒத்துழைப்பு நடவடிக்கை பயிற்சி நிறுவனம்

ஐ.நா அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கான சிறந்த அமைதிகாக்கும் படையினரை வழங்கும் குகுலேகங்கயிலுள்ள இராணுவ அமைதி ஒத்துழைப்பு நடவடிக்கை பயிற்சி நிறுவனமானது(IPSOTSL) ஐ.நா சபையின் தர நிலைக்கு ஏற்றவகையில் பல புதிய திட்டங்களை தனது வளாகத்தினுள் புதன் கிழமை 16 ஆம திகதி ஆரம்பித்துள்ளது. இந்நிகழ்விற்கு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் , இராணுவத் தளபதியும் மற்றும் கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் பிரதம அதிதியாக பங்கேற்றார்.

அன்றைய பிரதம அதிதிக்கு வரவேற்பு அளித்த பின்னர், அவர் இராணுவ அமைதி ஒத்துழைப்பு நடவடிக்கை பயிற்சி நிறுவன வளாகத்திற்கு செல்லும் புதிதாக புதுப்பிக்கப்பட்ட பிரதான வீதியினை திறந்து வைத்த்தோடு அவ்வீதிக்கு ‘Peace Drive’ என்று பெயரிட்டார். இராணுவ அமைதி ஒத்துழைப்பு நடவடிக்கை பயிற்சி நிறுவன பிரதான நுழைவாயிலிற்கு அருகில் கவச வாகன மற்றும் புதிய பெயர் பலகையினை திறந்து வைத்தார்.

பின்னர் லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு இராணுவ சம்பிரதாய முறைப்டி பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை அளிக்கப்பட்டதோடு இராணுவ அமைதி ஒத்துழைப்பு நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் தளபதியும் இராணுவத் தலைமையகத்தின் நடவடிக்கை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் சாந்த ரணவீர , சில சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஐ.பி.எஸ்.ஓ.டி.எஸ்.எல் பயிற்றுநர்கள் ஆகியோரினால் வரவேற்கப்பட்டார்.

பௌத்த வழிபாட்டு தளம், அதன் சன்னதி மற்றும் புதிய புத்தர் சிலையை திறந்து வைத்தல் உள்ளிட்ட பல உள்கட்டமைப்பு கட்டுமானங்களை மகா சங்க உறுப்பினர்களின் ‘செத் பிரித்’ நிகழ்விற்கு மத்தியில் திறந்து வைத்தார். பின்னர் லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் நீண்ட கால தேவையாக காணப்பட்ட நிறுவனத்தில் புதிதாக அமைக்கப்பட்ட விளையாட்டு வளாகம் , நினைவுச்சின்ன அமைதி கோபுரம், உள்ளக பூப்பந்து மைதானம் மற்றும் வொரன்ட் அதிகாரிகள் மற்றும் சார்ஜென்ட் உணவக கட்டிட அறை ஆகியவற்றினை திறந்து வைத்தார். பின்னர் அவர் வளாகத்தினுள் இலுப்பை மரக்கன்றினை நட்டு வைத்தார்.

இராணுவ அமைதி ஒத்துழைப்பு நடவடிக்கை பயிற்சி நிறுவன நிர்வாகிகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான தனது உரையில், தான் நியூயோர்க்கில் ஐ.நா தூதராக இருந்த நாட்களைப் பற்றியும், ஐ.நா அமைதிகாக்கும் பணிகளுக்கான இலங்கை அமைதி காக்கும் நடவடிக்கையினை மேம்படுத்த அவர் எவ்வாறு நெருக்கமாக பணியாற்றினார் என்பதையும், அவர்களின் சம்பளம், சலுகைகள் மற்றும் பிற வசதிகளை உயர்த்தவும் எவ்வாறு தன்னை அர்பணித்தார் என்பது பற்றியும் தெரிவித்தார்.

"முப்படை சேவைகளின் உறுப்பினர்களிடையே மட்டுமல்லாமல், போலிஸ் ஒதுக்கீட்டிலும் எண்ணிக்கையை அதிகரிக்க முடிந்தது. அமைதி காக்கும் பணியானது ஒரு உன்னத பணியும் மற்றும் அதன் மதிப்பு மகத்தானதுமாகும்.இலங்கை மின் இயந்திரவியல் மற்றும் பொறியியலாளர் படையணியின் பட்டறைகள் ஆரம்பித்த பின்னர் ஐ.நா. தரநிலைகளுக்கு ஏற்ற வகையில் இதுபோன்ற வாகனங்களை உற்பத்தி செய்து அந்நிய செலாவணியையும் கொண்டு வருவதனால் நமது தேசிய பொருளாதாரத்தை மேலும் உயர்த்த முடியும் , ”என்று அவர் குறிப்பிட்டார்.

படையினர் மத்தியில் உரையாற்றிய பின்னர் அவர் ஐ.நா விணியோக அதிகாரிகள் பாடநெறியினை வெற்றிகரமாக பூரத்தி செய்யத முதல் ஐந்து மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வைத்த்தோடு அவர்களை வாழ்த்தினார். அதன் பின்னர் சமாதானத்தை குறிக்கும் வகையில் அவரினால் சமாதான புறாவானது பறக்கவிடப்பட்டது.

பின்னர் இராணுவ அமைதி ஒத்துழைப்பு நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் தளபதியும் இராணுவத் தலைமையகத்தின் நடவடிக்கை பணிப்பகத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் ஷாந்த ரணவீர அவர்களினால் இராணுவத் தளபதிக்கு அவரை பாராட்டும் முகமாக நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. பின்னர் அவர் அதிதிகள் புத்தகத்தில் தனது கையொப்பத்தினை இட்டார்.

குறித்த நிகழ்வில் இராணுவ செயலாளர் ஜயஷாந்த கமகே,பொது பதவி நிலை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர ஜெனரல் பிரதீப் டி சில்வா , 61 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்ஜய வனசிங்க, பொறியியலாளர் சேவை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரத்னசிறி கனேகொட, வெ ளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் லசந்த ரெட்ரிகோ, மற்றும் ஊடக பணிப்பாளரும் இராணுவ பேச்சாளருமான பரிகேடியர் சந்தன விகரமசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.Buy Sneakers | Shop: Nike