Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th December 2020 11:32:18 Hours

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி பட்டமளிப்பு விழா தாமரைத் தடாகத்தில்

வெள்ளிக்கிழமை (14) மாலை தாமரைத் தடாக மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கில் இடம்பெற்ற பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் பாடநெறி 14 இன் பட்டமளிப்பு விழாவின் பிரதம அதிதியாக பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடன்பிட்டிய மற்றும் முகாமைத்துவ பேரவை உறுப்பினர்களின் அழைப்பின் பேரில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) GDHK கமல் குணரத்ன அவர்களுடன் பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா கலந்துக்கொண்டார்.

சபுகஸ்கந்தவில் அமைந்துள்ள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி முப்படைகளின் மத்திய தர அதிகாரிகளுக்கு இராணுவ உயர் கல்வியினை வழங்கும் நிறுவனமாகும். இதனூடாக உலகின் பெரும்பாலான முப்படைகள் பின்பற்றும் வகையில் முப்படைகளின் பயிலுனர் அதிகாரிகளின் இராணுவ மூலதர்மம், தந்திரோபாய திட்டமிடல், தொழிற்த்துறை அறிவு மற்றும் புரிந்தணர்வு என்பவற்றை அபிவிருத்தி செய்யும் நோக்கில் நிறுவப்பட்டுள்ளது

ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட பிரதம அதிதியை கலையரங்கின் நுழைவாயிலில் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் கட்டளைத் தளபதியுடன் இணைந்து பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா வரவேற்றார்.

பாடநெறி இலக்கம் 14 ஆனது 2020 ஜனவரி மாதம் 06ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு டிசம்பர் மாதம் 11ம் திகதி நிறைவிற்கு வந்தது. இப்பாடநெறியில் இலங்கைத் தரைப்படையின் 81 அதிகாரிகளும், இலங்கை கடற்படையின் 23 அதிகாரிகளும், இலங்கை வான் படையின் 27 அதிகாரிகளும், பங்காளதேஷ், சீனா, இந்தியா, இந்தோனேஷியா, மாலைத்தீவுகள், நேபாளம், ஓமான், பாகிஸ்தான், ருவண்டா, சவுதி அரேபியா மற்றும் சூடான் ஆகிய நாடுகளின் 18 அதிகாரிகள் என மொத்தம் 149 பேருக்கு பட்டமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிசாந்த உலுகேதென்ன, விமான படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பதிரன கௌரவ விருந்தினர்கள், முன்னாள் முப்படைத் தளபதிகள், பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் முன்னாள் கட்டளைத் தளபதிகள் , கல்லூரியின் கல்வி சார் ஊழியர்கள், முப்படைகளின் சிரேஸ்ட அதிகாரிகள், இராணுவ சேவை வனிதையர் பிரிவுத் தலைவி திருமதி சுஜிவா நெல்சன், பட்டதாரிகளின் பெற்றோர் மற்றும் குடும்ப அங்கத்தவர்கள், சிறப்பு விருந்தினர்கள். சுகாதார அறிவுறுத்தல்கள் பிரகாரம் கலந்து கொண்டனர்.

கல்வி அடைவுகளில் சிறந்து விளங்கிய கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு பிரதம அதிதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) GDHK கமல் குணரத்ன பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் கட்டளைத் தளபதியுடன் இணைந்து சிறப்பு விருதுகள் வழங்கி கௌரவித்தார்.

கட்டளைத் தளபதி கௌரவ விருது

சராசரி புள்ளி 70% (B+) அல்லது அதற்கு மேற்பட்ட சராசரி புள்ளிகளை பெறும் பயிலுனர் அதிகாரிகளுக்கான கட்டளைத் தளபதியின் கௌரவ விருதுக்கான சான்றிதழ் பெற்றவர்கள்.

தரைப்படை

மேஜர் தீபக் டலால் (இந்தியா)

மேஜர் S.A.R.R.P.K குடபந்தர (இஇப)

கடற்படை

கமண்டர் முகமட் அல் அமீன் முசும்தர்(G),psc,BN (பங்காளதேஷ்),

லெப்டிணட் கமண்டர் (N) B.A.R.S பமுனுசிங்க

லெப்டிணட் கமண்டர் W.P.P.N பெரேரா

விமான படை

விங் கமண்டர் ஆசிப் சமட் செயிக் psc (பாகிஸ்தான்),

ஸ்கொடன் லீடர் W.R.D ஜயவர்தன

தங்க பேனை விருது

பாடநெறி இலக்கம் 14 இன் சிறந்த ஆய்வுக் கட்டுரைக்கான தங்க பேனை மேஜர் B.G.N.I கருனாதிலக்க SLAC அவர்களுக்கு வழங்கப்பட்டது.

Golden Owl விருது

சகல துறைகளிலும் சிறந்த திறன்களை வெளிப்படுத்திய தரைப்படை கடற்படை விமான படை எனும் ஒழுங்கில் உள்நாட்டு வெளிநாட்டு பயிலுனர் அதிகாரிகள் Golden Owl விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

தரைப்படை பயிற்சி பிரிவு

வெளிநாட்டு பயிலுனர் அதிகாரி - மேஜர் தீபக் டலால் (இந்தியா)

உள்நாட்டு பயிலுனர் அதிகாரி - மேஜர் S.A.R.R.P.K குடபந்தர (இஇப)

கடற்படை பயிற்சி பிரிவு

வெளிநாட்டு பயிலுனர் அதிகாரி - கமண்டர் முகமட் அல் அமீன் முசும்தர் (G), psc, BN (பங்காளதேஷ்),

உள்நாட்டு பயிலுனர் அதிகாரி - லெப்டிணட் கமண்டர் (L) B.A.R.S பமுனுசிங்க

விமான படை பயிற்சி பிரிவு

வெளிநாட்டு பயிலுனர் அதிகாரி - விங் கமண்டர் ஆசிப் சமட் செயிக் psc (பாகிஸ்தான்),

உள்நாட்டு பயிலுனர் அதிகாரி - ஸ்கொடன் லீடர் W.R.D ஜயவர்தனjordan release date | Womens Shoes Footwear & Shoes Online