Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th November 2020 16:56:12 Hours

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் தளங்கள் தொடர்பான கலந்துரையாடல்கள்

கிழக்கு மாகாண தொல்பொருள் பாரம்பரிய முகாமைத்துவம் தொடர்பாக ஜனாதிபதி உத்தரவின் பேரில் பாதுகாப்பு செயலாளரின் கீழ் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி பணிக்குழுவினர் 23 ஆம் திகதி திங்கட்கிழமை கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் இடங்களிலும் மற்றும் அதைச் சுற்றியுள்ள பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் வெலிகந்தை கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் வெவ்வேறு நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி உறுப்பினர்கள், கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் மற்றும் வரலாற்று தளங்களின் தனிநபர்கள் மற்றும் வெவ் வேறு ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களால் இந்த ஆக்கிரமிப்புகளிலிருந்து பாதுகாப்பது தொடரபாக ஜனாதிபதி பணிக்குழுவினர்களுடன் கலந்துரையாடினர்.

இந்த நிகழ்வில் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் செனரத் பண்டார திசாநாயக்க, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சிந்தக கமகே, சிவில் பாதுகாப்புத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் (ஓய்வு) ஆனந்த பீரிஸ், கிழக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் திரு. நிலந்த ஜயவர்தன, 22, 23 மற்றும் 24 வது படைப் பிரிவுகளின் படைத் தளபதிகள், அம்பாரை மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் பிரதி பொலிஸ்மா அதிபர்கள், தொல்பொருள் துறை, வனவிலங்கு துறை மற்றும் வனத்துறை பிரதிநிதிகள் பலர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர். best Running shoes brand | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092