Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th November 2020 00:05:58 Hours

கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து மூன்று நாடுகளுக்கிடையில் இடம்பெற்ற அமர்வு

கொழும்பு ஹோட்டல் தாஜ் சமுத்ராவில் சனிக்கிழமை (28) நடைபெற்ற 'கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு' குறித்த 4 ஆவது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முத்தரப்பு மட்டக் கூட்டமானது, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜித் டோவால், மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் திருமதி மரியா திதி , பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது. இன்று பிற்பகல் இடம்பெற்ற குறித்த அமர்வில் இந்திய கடலில் கடல்சார் சவால்களை கையாள்வதிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், பொது நலனுக்காக பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

கௌரவ வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்கள் கூட்டத்தின் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்திய உயர் ஸ்தானிகர், மாலத்தீவுக்கான தூதுவர், வெளியுறவு அமைச்சின் செயலாளர் அட்மிரல் (ஓய்வு) பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் , இராணுவத் தளபதியும் மற்றும் கோவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர், இலங்கை கடலோர காவல்படை பணிப்பாளர் நாயகம், இலங்கை வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்களின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்தியா, மாலத்தீவு மற்றும் இலங்கையின் கடல்சார் பாதுகாப்புத் துறையிலுள்ள பல வல்லுநர்கள், மொரீஷியஸ் மற்றும் சீஷெல்ஸ், இந்தியா மற்றும் மாலத்தீவின் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் மூத்த அதிகாரிகள் மட்டத்தில் இடம்பெற்ற அமர்வுகளில் கலந்து கொண்டனர்.

குறித்த 4 வது மட்டக் கூட்டத்தின்போது பிராந்தியத்தில் தற்போதைய கடல்சார் பாதுகாப்பு சூழல் மற்றும் கடல்சார் எல்லை விழிப்புணர்வு, மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரணம், கூட்டுப் பயிற்சிகள், திறன் மேம்பாடு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல்கள், கடல் மாசுபாடு மற்றும் கடல்சார் ஆகிய துறைகளில் தற்போதுள்ள ஒத்துழைப்பு, கோவிட் -19 சவால்கள் உள்ளிட்ட விடயங்கள் கவணம் செலுத்தப்பட்டதுடன் இந்த சவால்களை கையாள்வதற்கான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவதற்கான இணக்கப்பாடும் எட்டப்பட்டுள்ளன.

பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன குறித்த அமர்விற்கான வரவேற்புரைகளை வழங்கியதோடு முத்தரப்பு மட்டத்தில் இடம் பெறும் இவ் வகையான உரையாடலின் முக்கியத்துவத்தையும் சுட்டிக் காட்டினார். அமர்வுகளின் கலந்துரையாடல் தொடங்குவதற்கு முன்பு கௌரவ வெளிவிவகார அமைச்சர் சிறப்புரையாற்றினார். ஜனாதிபதியின் ஆலோசகர் திரு லலித் வீரதுங்க இறுதிக் கருத்துக்களை தெரிவித்தார்.

அமர்வுகளின் பின்னர் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட ஒரு கூட்டு செய்தி அறிக்கை பின்வருமாறு:

கூட்டு செய்தி அறிக்கை

இலங்கை, இந்திய மற்றும் மாலைத்தீவுக்கிடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான 4ஆவது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு கூட்டம் இலங்கையின் தலைமைப் பொறுப்பில் 2020 நவம்பர் 28ம் திகதி கொழும்பில் இடம்பெற்றது. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜீத் டோவால், மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் மரியா தீதி மற்றும் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்த கூட்டத்தில், மொரீஷியஸ் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் சிரேஷ்ட மட்ட பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். கொவிட்-19 தொற்று நோய் சூழ்நிலையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் ‘ஏயார் பப்பில்' எனும் சுகாதார நடைமுறைகள் பின்பற்றபட்டதுடன் பார்வையாளர்களாக கலந்து கொண்ட நாடுகளின் பிரதிநிதிகள் இணைய வழி தொடர்புகள் மூலம் கலந்து கொண்டனர்.

கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட கூட்டம் 2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன் இதுவரை மூன்று கூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் இறுதி கூட்டம் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் புது டில்லியில் நடைபெற்றது. கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் மூன்று நாடுகளுக்கிடையில் நெருக்கமான ஒத்துழைப்பை மேம்படுத்தவும் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தவும் உதவியுள்ளன. இவைகள் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட கூட்டங்களின் போது முன்வைக்கப்பட்ட விடயங்களின் தொடர்ச்சியான செயற்பாடுகள் மற்றும் நடமுறைபட்த்தல் தொடர்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட கூட்டங்களின் போது ஆராயப்பட்டன. கடல்சார் பாதுகாப்பில் எழும் பொதுவான பிரச்சினைகள் குறித்து இந்து சமுத்திர பிராந்தியத்தில் அர்த்தமுள்ள ஒத்துழப்பை ஊக்குவிக்கும் இக்கூட்டத்தின் முக்கியதுவத்தை உணர்ந்து, மூன்று நாடுகளும் இப்பிராந்தியத்தில் கடல்சார் விழிப்புணர்வு, மனிதாபிமான உதவிகள், அனர்த்த நிவாரணங்கள், கூட்டுப் பயிற்சி, திறன் மேம்பாடு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல், கடல் மாசடைதல், கடலுக்கு அடியிலான மரபுரிமைகள் போன்ற விடயங்களில் ஒத்துழைப்பை அதிகரித்து அது தொடர்பிலான சவால்களை முறியடித்து பொது நன்மை விடயங்களில் கவனம் செலுத்தல் தொடர்பாக இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டன. இந்த சவால்களை கையாள நாடுகளிடையே ஒத்துழைப்பினை மேலும் வலுப்படுத்தவும், பொதுவான நலனுக்காக பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அவர்கள் இணக்கப்பாட்டுக்கு வந்தனர்.

பொதுவான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து மூன்று நாடுகளும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டதுடன் பயங்கரவாதம், தீவிரமயமாக்கல், தீவிரவாதம், போதைப்பொருள் கடத்தல் , ஆயுதக்கடத்தல், ஆட்கடத்தல், நிதிமோசடி, இணைய பாதுகாப்பு மற்றும் காலநிலை சீற்றம் என்பவற்றை உள்ளடக்கிய கடல்சார் மாற்றங்கள் தொடர்பான புலனாய்வு தகவல்கள் பகிர்வை மேம்மபடுத்துவதற்கான நோக்கத்தை விரிவு படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பு வழங்க இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நாடுகளின் தலைவர்களினால் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக சந்திப்புக்களை நடத்தவும் தேவையான தகவல்களை பரிமாறி உரிய நேரத்தில் கலந்துரையாடி தேவையான முடிவுகளை எடுக்கவும் அவற்றை நடைமுறைப்படுத்தவும் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டங்களில் வருடத்திற்கு இருமுறை செயற்குழு கூட்டங்களை நடத்தவும் அவர்களினால் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. (முடிவு). affiliate tracking url | Nike Off-White