Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th November 2020 13:00:01 Hours

வெளிநாடுகளில் இருந்து மேலும் பயணிகள் வருகை – நொப்கோ தெரிவிப்பு

இன்று (28) காலை வரை, கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 473 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் ஓமான் நாட்டில் இருந்து இலங்கை வருகை தந்த இலங்கையைச் சேர்ந்தவர் ஆவர். அவர்களில் 138 பேர் கொழும்பு மாவட்டம், 63 பேர் கம்பஹா மாவட்டம் மற்றும் 35 பேர் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இன்று (28) காலை 6.00 மணி வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு தொற்றாளர்களின் எண்ணிக்கை 19,431 பேர் ஆகும். மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி( 3,059) மற்றும்பேலியகொடை மீன் சந்தை கொத்தணி(16,372) நபர்களில் மொத்தம் 12,793 பேர் சுகமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

அதன் பிரகாரம் றேறு 27 ஆம் திகதி வரையான மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 22,500 ஆகும். அவர்களில் 16,225 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். நேற்று காலை வரை 6168 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று காலை (28) 0600 மணியளவில் (கடந்த 24 மணி நேரத்திற்குள்) முழுமையாக சுகமடைந்த 410 பேர் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று காலை வரை கொவிட்-19 தொற்று காரணமாக மொத்தம் 107 மரணங்கள் பதிவாகியுள்ளது. அதில் நேற்து 08 மரணங்கள் பதிவாகியுள்ளது, அவர்கள் கொழும்பு 13, மருதானை, மெகசின் சிறைசாலை, கொழும்பு 10, கொழும்பு 02, கொழும்பு 09, மற்றும் கொழும்பு 15 ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர். அதனடிப்படையில் 28 ஆம் திகதி காலை வரை கொவிட்-19 தொற்று நோய் காரணமாக மரணமடைந்த மொத்த நபர்களின் எண்ணிக்கை 107 ஆகும்.

இன்று (28) காலை தோஹா கட்டாரில் இருந்து QR 668 விமானம் ஊடாக 44 பயணிகளும்,இந்தியாவிலிருந்து UL 1026 விமானம் ஊடாக 53 பயணிகளும் இலங்கை வருகை தந்துள்ளனர். அதேபோல், இன்று (28) காலை UL 218 விமானம் ஊடாக தோகா கட்டாரில் இருந்து 52 பயணிகள் இலங்கை வரவுள்ளனர். வருகை தந்த அவர்கள் அனைவரும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை (28) வரை முப் படையினரால் நிர்வகிக்கப்படும் 47 தனிமைப்படுத்தல் மையங்களில் 5,088 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நவம்பர் 27 ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 13,286 ஆகும். trace affiliate link | Nike Shoes