Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th November 2020 10:04:28 Hours

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் வீட்டு திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் நிர்மாணிப்பு

இலங்கை இலேசாயுத காலாட் படையணியினால் உயிர் நீத்த போர்வீரர்களின் குடும்பங்களுக்கும், இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் மாற்றுத் திறனாளி படை வீரர்களுக்கான 20 வீடுகள் நிரமாணிக்கும் திட்டத்தின் கீழ், நான்கு புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு அவை கடந்த நாட்டகளில் திறந்து வைக்கப்பட்டன.

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயநாத் ஜயவீர அவர்களின் எண்ணக்கருவின் கீழ், மற்றும் படையணி தலைமையகம் மற்றும் பல நன்கொடையாளர்களின் அனுசரணையில் தியத்தலாவை, உஹன, பரகடுவ மற்றும் மங்களகமவில் ரூ .4.4 மில்லியன் பெறுமதியில் குறித்த புதிய வீடுகள் நிர்மானிக்கப்பட்டன.

அதன்படி, சுமார் 1.3 மில்லியன் ரூபாய் செலவில் இலங்கை இலேசாயுத காலாட்படையணியினரின் நிதி மற்றும் படையினரின் பங்களிப்பின் கீழ் நிர்மானிக்கப்பட்ட புதிய வீடானது, யுத்த்தில் படுகாயமடைந்த தியதலாவையில் வசிக்கும் 1 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஒருவருக்கு 17 ஆம் திகதி திங்கட்கிழமை கையளிக்கப்பட்டது.

2009 ஜனவரி 23 அன்று எல்.ரீ.ரீ.ஈ யினரின் மோர்டார் தாக்குதலால் கடுமையாக படுகாயமடைந்த 4 ஆவது இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் லான்ஸ் கோப்ரலுக்காக பரகடுவையில் நிர்மாணிக்கப்பட்ட மற்றொரு புதிய வீடானது திறந்து வைக்கப்பட்டது. ரூ 1.3 மில்லியன் செலவில் நிர்மானிக்கப்பட்ட இப் புதிய வீடானது நவம்பர் 17 ஆம் திகதி கையளிக்கப்பட்டது.

6 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடூ உஹன பிரதேசத்தில் வசிக்கும் தாய் நாட்டிற்காக 2008 ஆம் திகதி பெப்பரவரி 16 ஆம் திகதி நகர் கோவில் பிரதேசத்தில் எல்.ரீ.ரீ.ஈ யின் மோட்டார் குண்டு தாக்குதலில் உயிர் நீத்த போர் வீரரான டிக்கிரி பண்டா அவரின் துணைவியான எச்.எம். சந்திர காந்திக்கு கையளிக்கப்பட்டது. ரூ 1.3 மில்லியன் செலவிலான இந்த கட்டுமான பணிக்கான அனுசரனையானது டோக்கியோ சிமென்ட் (பிரைவேட்) லிமிடெட் முகாமைத்துவ பணிப்பாளர் திரு எஸ்.ஆர். ஞானம் அவர்களினால் வழங்கப்பட்டது. மற்றும் வரையறுக்கப்பட்ட டோக்கியோ சிமென்ட் தனியார் நிறுவனத்தின் பொறியியலாளர்ஆலோசகர் திரு மயுலி குணரத்ன அவர்கள் இதற்கான பொறியியலாளர் ஒதுழைப்பை வழங்கினார். குறித் வீடானது நவம’பர்16 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை இலேசாயுத காலாட்படையணி தலைமையக பட்டாலியனின் நிதி மற்றும் படையினரின் பங்களிப்பின் கீழ் ரூ .1.3 மில்லியன் செலவில் நிர்மானிக்கப்பட்ட புதிய வீடானது, மங்களகமயில் வசிக்கும் இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் இராணுவ சிப்பாய் 2009 மார்ச் 23 ஆம் திகதி கிலாலியில் கன்னிவெடித் தாக்குதலின் போது கடுமையாக படுகாயமடைந்தார் அவர்களுக்கு நவம்பர் 17 ஆம் திகதி வழங்கப்பட்டது.

இரண்டு நாட்களிலும் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயநாத் ஜயவீர அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொட்டதுடன், இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் மத்திய கட்டளைத் தளபதி பிரிகேடியர் அனுர திசானாயக மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வானது மகா சங்க உறுப்பினர்களின் மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் புதிய வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. மேலும் அனைத்து பயனாளிகளுக்கும் வீட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தின் உறுப்பினர்கள், இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தின் மத்திய படைத் தளபதி, அதிகாரிகள் மற்றும் ஏனைய சிப்பாய்கள் கலந்து கொண்டனர். Sport media | New Releases Nike