Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th November 2020 19:06:59 Hours

இராணுவ விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு புதிய வசதிகள்

பனாகொடை இராணுவ விளையாட்டு கிராமத்தில் ஆணையதிகாரமற்ற அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உணவகத்திற்காக புதிதாக கட்டப்பட்ட மாடி கட்டடம் இன்று (19) இராணுவ விளையாட்டு பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் மொஹான் ரத்நாயக்கவின் அழைப்பின் பேரில் பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டுத் மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இராணுவத் தளபதியை வரவேற்றதன் பின்னர் அதிகாரவாணையற்ற அதிகாரிகள் உணவகம் (கோப்ரல் கிளப்) அமைக்கப்பட்ட தரை தளத்தில் நினைவு பலகையினை திரைநீக்கம் செய்தார். இதில் உணவுகளை சூடாக வைத்திருப்பதற்கான சூட்டு அலுமாரி, தொலைக்காட்சிகள் மற்றும் ஹைஃபை ஒலி (HiFi) வடிவமைப்புகள் என்பன நிறுவப்பட்டுள்ளன.

அதன் பின்னர் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அதே இரண்டு மாடி கட்டிடத்தின் 1 ஆவது மாடியில் புதிதாக கட்டப்பட்ட மேல் குறிப்பிடப்பட்ட வசதிகளுடனான சிப்பாய்களுக்கான உணவகத்தையும் திறந்து வைத்தார்.

முன்னாள் விளையாட்டு பணிப்பக பணிப்பாளர் வீரர் பிரிகேடியர் லால் சந்திரசிரி அவர்களின் திட்டத்திற்கு அமைவாக நிர்மானிக்கப்பட்ட இக் கட்டிடம் இராணுவத் தளபதியின் ஆசீர்வாதத்துடன் தற்போதைய விளையாட்டு பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் மொஹான் ரத்நாயக்க, விளையாட்டு கிராமத்தின் தளபதி கேணல் பிரியாந்த நவரத்ன மற்றும் லெப்டினன் கேணல் டி. தர்சேன ஆகியோரின் திட்டங்கள் முதலாவது பொறியியலாளர் சேவைகள் படையினரின் தொழில்நுட்ப உதவியுடன் விளையாட்டு கிராமத்தின் படையினரின் அர்பணிப்புடன் பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய வசதிகள் பயிற்சிக்காக தங்கும் இராணுவ விளையாட்டு வீர மற்றும் வீராங்கனைகளுக்கு ஊக்கமளிக்கும். இலங்கை இராணுவத்தின் 40 விளையாட்டுக் குழுக்களில், மொத்தம் 19 விளையாட்டுக் குழுக்கள் இந்த பனாகொடை இராணுவ விளையாட்டு விலேஜில் அமைந்துள்ளன, இங்கு சராசரியாக சுமார் 1000 விளையாட்டு வீர மற்றும் வீராங்கனைகள் வசிக்கின்றனர்.

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன, இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் துமிந்த சிரினாக, மேற்கு பாதுகாப்பு படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சூல அபேநாயக்க ஆகியோர் அன்றைய நிகழ்வில் கலந்து கொண்டனர். Adidas footwear | Nike Running