Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th November 2020 16:13:54 Hours

இராணுவ அபிவிருத்தி நடைபாதை பிரதேசத்தில் 'ஹுஷ்ம தென துரு' தேசிய மர நடுகை திட்டம் ஆரம்பிப்பு

புற நகர்ப்புறங்களை பசுமையாக்கல் மற்றும் இராணுவ தலைமையகப் பகுதியைச் சுற்றியுள்ள சுற்றுப்புறங்களை அழகுபடுத்தும் இராணுவத்தை பாராட்டும் முகமாக, மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை, சுற்றுச்சூழல் அமைச்சு மற்றும் இராணுவத்தினால் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட 'ஹுஷ்ம தென துரு' தேசியத் மர நடுகை திட்டத்தை அதிமேதகு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (20) காலை இராணுவத்தால் அமைக்கப்பட்ட புதிய பூங்காவை (நடைபாதை) சுற்றி முதல் சில சந்தன மரக்கன்றுகளை நட்டு ஆரம்பித்து வைத்தார்.

கெளரவ சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோர் இந்த விழாவிற்கு வருகை தந்த அதிமேதகு ஜனாதிபதி அவர்களை வரவேற்றனர்.

புதிய பசுமைத் திட்டத்தினூடாக நாடு முழுவதும் 2 மில்லியன் மரக்கன்றுகளை நடவு செய்ய எதிரபார்க்கப்பட்டுள்ளதோடு, ஜனாதிபதி அவர்களின் ‘சௌபாக்ய தெக்ம’ கொள்கைத் திட்டத்தின் கீழ் நடை முறைப்படுத்தப்படும் திட்டத்தின் ஊடாக நாட்டின் வனப்பகுதி 30 சதவிகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறது. 'ஹுஸ்ம தென துரு' தேசிய திட்டத்தினை ஆரம்பிக்கும் முகமாக இராணுவத்தினால் மேம்படுத்தப்பட்ட மற்றும் அழகுபடுத்தப்பட்ட இடத்தில் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் முதல் சந்தன மக்கன்றினை நட்டார். கெளரவ அமைச்சரும் லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களும் அதனைத் தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டனர்.

அதன் பின்னர், ஜனாதிபதி மற்றும் பிற புகழ்பெற்ற அதிதிகள் பசுமை சுற்றுச்சூழல் திட்டத்தில் முன்னணியில் இருக்கும் பாடசாலை மாணவர்களின் பிரதிநிதிகள் குழுவிற்கு மரக்கன்றுகளை அடையாளமாக வழங்கினர்.

சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க, மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையின் தலைவர் திரு சிரிபால அமரசிங்க, மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் திரு. ஹேமந்த ஜயசிங்க, வேளாண்மை மற்றும் கால்நடை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் இந்திராஜித் கந்தனராச்சி உள்ளிட்ட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் ,மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அழைப்பாளர்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நாட்டின் காடு வளர்ப்பு மற்றும் அழகுபடுத்தலுக்கான தேசிய உந்துதலை விரைவுபடுத்துவதில் முன்னிலை வகிக்கும் முகமாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாத தொடக்கத்தில் இலங்கை இராணுவம், அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் பசுமைத் திட்டக் கருத்தாக்கத்துடன் லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் எண்ணக்கருவின் 'துரு மிதுரு நவ ரட்டக்’ திட்டத்தின் கீழ் மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை சந்தியில் தொடங்கி ஸ்ரீ ஜெயவர்தனபுர இராணுவ தலைமையகம் வரை அரலி மரக்கன்றுகளை நடவு செய்து தனது பங்களிப்பினை வழங்கியது.

நடைபயிற்சி மற்றும் சிறுவர் பூங்காக்களை நிறுவல், புதிய நீரைத் தக்கவைக்கும் குளங்கள் மற்றும் ஏரிகளை தோண்டல் , நூற்றுக்கணக்கான அரிய உயிரினங்களின் மரக்கன்றுகளை நடல், மனிதனால் உருவாக்கப்பட்ட தொட்டிகளுக்கு மீன் குஞ்சுகளை இடல், சதுப்பு நிலங்களை வயல் நிலங்களாக மாற்றுவதன் மூலம் அறுவடை செய்தல் உள்ளிட்ட திட்டங்களை லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டன. இன்றுவரை, நாடு முழுவதும் உள்ள அனைத்து பாதுகாப்பு படைத் தலைமையகங்கள் மற்றும் படைப் பிரிவுகளில் இந்த திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. Asics footwear | Beyonce Ivy Park x adidas Sleek Super 72 ICY PARK White , Where To Buy , GX2769 , Ietp