Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th November 2020 20:21:30 Hours

பழமை வாய்ந்த இலங்கை இலேசாயுத கலாட் படை நலனோம்பு திட்டமாக யோகட் உற்பத்தி

பனாகொடை இலங்கை இலேசாயுத காலாட்படை ரெஜிமென்டல் தலைமையகம் அதிகாரிகள், சிப்பாய்கள், மாற்றுத் திறனாளி போர்வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் சார்பாக படையின் சேவை வனிதையர் பிரிவுடன் இணைந்து பல்வேறு நலன்புரிப் பணிகளைச் செய்து வருகிறது. படையினருக்கு சத்தான உணவு வழங்கும் நோக்கில் வியாழக்கிழமை (19) பிற்பகல் பனாகொடை இராணுவ வளாகத்தில் இடம்பெற்ற யோகட் மற்றும் பால் உற்பத்தி ஆரம்பிப்பு விழாவில் பாதுகாப்புப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா பிரதம விருந்தினராக கலந்துக்கொண்டார்.

தினசரி அடிப்படையில் பாரிய அளவில் உயரிய சுகாதார மற்றும் விஞ்ஞான நடைமுறைகளின் கீழ் யோகட் , யோகட் பானம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சில உற்பத்திகளை தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஊடாக பனாகொடை இராணுவ வளாக விற்பனை நிலையங்கள் மற்றும் வெளிச் சந்தைகளில் இலங்கை இலேசான காலாட் படை படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயநாத் ஜயவீர, இலங்கை இலேசான காலாட் படை சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி அனுஜா ஜயவீர மற்றும் மேல் மாகாணம் பால் உற்பத்தி மேம்பாட்டு பிரிவு தலைவி வைத்தியர் தேவிகா கமகே ஆகியோரின் ஒத்துழைப்பு மற்றும் திறமையான வழிகாட்டுதலில் சந்தைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய தயிர் உற்பத்திக்கான கட்டட தொகுதி மகா சங்க உறுப்பினர்களின் மத அனுஸ்டானங்களுக்கு மத்தியில் சுப வேளையில் பிரதம விருந்தினர் பாதுகாப்புப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா நினைவு பலகையை திரை நீக்கம் செய்து புதிய உற்பத்தியைத் தொடங்கிவைத்தார். பின்னர் பிரதம விருந்தினர் அங்கு இருந்த படையினருடன் சில கருத்துக்களை பகிர்ந்துகொணடார். இத்திட்டம் குறித்து இலங்கை லைட் காலாட் படையணி தலைமையக விருந்தினர் புத்தகத்தில் பாராட்டு பதிவிட்டார்.

இலங்கை லைட் காலாட் படையின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயநாத் ஜயவீர அவர்கள் தளபதியினை புதிய தயிர் உற்பத்தி பிரிவிக்கு வரவேற்றதுடன் பிரதம விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கினார்.

மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சூலா அபேநாயக்க, இலங்கை இலேசான காலாட் படை சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி அனுஜா ஜயவீர, இலங்கை இலேசான காலாட் படை நிலையத் தளபதி பிரிகேடியர் அனுர திசாநாயக்க, சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்கள், படையினர் மற்றும் அழைப்பாளர்கள் விழாவில் கலந்துக் கொண்டனர். Best jordan Sneakers | nike