Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th November 2020 20:36:42 Hours

'நாடு திரும்புபவர்கள் நேரடியாக சொந்த விமானப் பயண சீட்டினை வாங்க முடியும்' நொப்கோ பணிக்குழு தெரிவிப்பு

நொக்போ தலைவரும் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தலைவருமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும் நிபுணருமான வைத்தியர் அசேல குணவர்தன ஆகியோரின் இணைத் தலைமையில் பிற்பகல் (18) நொப்கோ பணிக்குழு கலந்துரையாடல் இடம் பெற்றது. இதில் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் குறித்த துறைசார்ந்த வல்லுநர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த கலந்துரையாடலில் கொவிட் தொற்றின் நிலைமை அதன் புதிய முன்னேற்றங்கள் மற்றும்மேலும் தொற்றுக்குள்ளானவர்களை கண்டரிய அவசரகால நடவடிக்கைகள் ஆகியவற்றை பணிக்குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் இருப்பிடங்களை நிர்வகித்தல், புதிய பகுதிகளுக்கு வைரஸ் தொற்று ஊடுருவல், பொதுமக்களின் நடத்தை முறைகள், தடைசெய்யப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய சேவைகளை நடத்துதல், மினுவாங்கொடை நோய் பரவலை குறைத்தல் மற்றும் பொலிஸ் நோய் பரவல் அதிகரிப்பு, சிறைகளில் நோய் தொற்று புதிய வைரஸின் நடத்தை முறைகள் பற்றிய கண்டுபிடிப்புகள், வரவிருக்கும் க.பொ.த. சாதாரன தரம் கற்றல் தொடர்பான விடயங்களை கலந்துரையாடினர்.

கிருமிநாசினிகள் அல்லது தொற்று நீக்கி திரவத்தினால் போதுமான அளவு சுத்தமாக வைக்கப்படாத பொதுவான சுகாதார வசதிகளைப் பயன்படுத்துவதன் மூலமும் கொடிய வைரஸ் பரவுவது சாத்தியமாகும் என்று சுட்டிக்காட்டப்பட்டது.பொருளாதார மையங்களில் எழுமாற்று பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்துதல் மற்றும் சமூக தூரத்தை கடுமையாக கவணத்தில் கொள்ளல், சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது மற்றும் நெரிசலான இடங்களைத் தவிர்ப்பது போன்றவையும் கூட்டத்தில் மதிப்பாய்வு செய்யப்பட்டன.

எதிர்காலத்தில் நாட்டிற்குள் திருப்பி அனுப்பும் நடைமுறைகள் குறித்து நொப்கோவிடமிருந்து ஆலோசனை பெறுமாறு வெளிவிவகார அமைச்சகத்திடம் கோரப்பட்டுள்ளது."வீடு திரும்ப விரும்பும் வெளிநாட்டில் வாழ்பவர்கள் எந்தவொரு மூன்றாம் தரப்பினரிடமும் செல்லாமல் நேரடியாக தங்கள் சொந்த டிக்கெட்டுகளை வாங்கலாம், அந்தந்த தூதரகங்களைத் தவிர அவர்கள் அத்தகைய நடைமுறைகளை அணுகக்கூடாது. இந்த தேவையை நொப்கோ நெருக்கமாக தீர்மானிக்கும்" என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.சிறைக் தொற்றாளர்களின் கட்டுப்பாடு உள்ளிட்ட பல தொடர்புடைய விடயங்களும் சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் கூட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.Sports brands | Nike Shoes, Sneakers & Accessories