Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th November 2020 10:58:08 Hours

இலங்கை மருத்துவ சங்கத்தின் இணையத் தள கற்றல் நிகழ்வில் இராணுவத் தளபதி பங்கேற்பு

கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்புத் தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் இன்று (16) மாலை இலங்கை மருத்துவ சங்கத்தால் (SLMA,) முன்னணி சுகாதார ஊழியர்கள் மற்றும் பொது மக்களுக்கான தகவல் தொடர்பு திறன்களை வளர்ப்பதற்கான இணையத் தள கற்றல் நிகழ்வில் கலந்து கொண்டார்.

இலங்கை மருத்து கல்லூரியின் தலைவர் பேராசிரியர் இந்திக கருணாதிலக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசல குணவர்தன மற்றும் ஒரு சில நிபுணர்கள் இந்த அமர்வில் கலந்து கொண்டனர்.

சுகாதார மற்றும் பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்துடன் இலங்கை மருத்துவ சங்கம் இந்த ஒரு மணி நேர இணையத் தள கலந்துரையாடலின் மூலம் வீடியோ அடிப்படையிலான கற்பித்தல் மற்றும் ஊடாடும் குழு விவாதங்களை சுகாதார ஊழியர்கள், பி.எச்.ஐக்கள், இராணுவ வீரர்கள் மத்தியில் தகவல் தொடர்பு மற்றும் கொவிட்-19 பரிமாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் அனைத்து செயலில் முன்னணி பங்கேற்பாளர்களின் திறனை மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கிறது. Sports brands | Nike Air Max 270