Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th November 2020 06:00:40 Hours

563 வது பிரிகேட்டின் 7 ஆவது இலங்கை இராணுவ சிங்க படையினரால் அணைக்கட்டு புனரமைப்பு பணிகள்

வன்னி பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 56 வது படைப்பிரிவின் 563 வது பிரிகேட்டின் கொக்கெலியாவையை தளமாகக் கொண்ட 7 இலங்கை சிங்க படையின் இரண்டு பிரிவுகள் கிராமங்கள்மற்றும் விவசாய நிலங்களை சேதப்படுத்து உதுக்குளம் அணையின் பழுதினை எட்டு மணி நேரத்திற்குள் வெள்ளிக்கிழமை (13) சரிசெய்தனர்.

கடந்த இரண்டு நாட்களாக பெய்த கடும் மழையால் குளத்தின் நீர் மட்டம் வான் பாயும் அளவை எட்டியது மற்றும் சுமார் 15 அடி நீளமுள்ள அணைக்கட்டு திடீரென வெடித்தது, சுமார் 74 ஏக்கர் விவசாய வயல்களுக்கும் காய்கறிகளுக்கும் தாழ் நில சேனைகளுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. நெடுங்கேணி விவசாய சேவைகள் திணைக்களத்தின் வெடிவைத்தகல்லு கிராம சேவையாளர் பிரிவு அதிகாரிகளின் வேண்டு கோளுக்கிணங்க படையினர் திருத்தல் பணிகளில் ஈடுப்பட்டனர்.

வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மற்றும் 56 வது படைப்பிரிவின் தளபதி ஆகியோரின் வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்களின் பேரில் 563 வது பிரிகேட் தளபதி கர்னல் பாண்டுக பெரேரா மற்றும் 56 படைப்பிரிவு சிவில் விவகார அதிகாரி லெப்டினன்ட் கேர்னல் டபிள்யூ.கே.ஏ.எஸ் பிரியந்தலால், 563வது பிரிகேட் சிவில் விவகார அதிகாரி 563 லெப்டினன்ட் கேணல் எம்.ஏ.சி.பி மாரசிங்க மற்றும் 7வது சிங்க படையின் கட்டளை அதிகாரி மேஜர் பி.டபிள்யூ.எஸ்.எஸ்.டி பீரிஸ் ஆகியோரின் ஒருங்கமைப்பில் இரண்டு படைக் குழுக்கள் பிரதேச விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் பழுதுபார்க்கும் பணியில் பங்கேற்றனர்.

வவுனியா மாவட்ட செயலாளர் மற்றும் 56 வது படைப்பிரிவு மேஜர் ஜெனரல் வசந்த டி அப்ரூ பாதிக்கப்பட்ட இடத்தின் பழுதுபார்ப்பு பணிகளில் முழு வீச்சில் பங்குபற்றும் படையினரின் தேவைகள் குறித்து விசாரித்தனர்.

பிரதி ஆணையாளர் மற்றும் விவசாய சேவைத் திணைக்கள தொழில்நுட்பவியலாளர், விவசாய சமாஜயத்தின் தலைவர், கிராமவாசிகள் உரிய நேரத்தில் இராணுவத்தின் தலையீடு மற்றும் தேவையான நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்தனர். Adidas shoes | Men’s shoes