Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th October 2020 09:42:00 Hours

இராணுவ தளபதி லீக் 20-20 இறுதி கிரிக்கெட் போட்டி

கொவிட் -19 வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதுடன், (Live with COVID-19), பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதி மற்றும் கொவிட் – 19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் வழிக்காட்டலுக்கமைய இராணுவ தளபதியின் லீக் 20-20 கிரிக்கெட் இறுதிப் போட்டியானது (17) ஆம் திகதி சனிக்கிழமை மாலை தொம்பகொடயில் அமைந்துள்ள இலங்கை இராணுவ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

ஒக்டோபர் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த போட்டியின் இறுதிப் போட்டிக்கு சீக்குகே பிரசன்ன தலைமையிலான யூத் ‘Army Northern Warriors’ அணியும், மற்றும் தினேஷ் சந்திமல் தலைமையிலான இராணுவ யூத் ‘Army Southern Warriors’ அணியும் தகுதி பெற்றன. அதற்கமைய இராணுவ கிரிக்கெட் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட 'இராணுவ தளபதி லீக் 20 -20' கிரிக்கெட் போட்டி பாணந்துறை 'சுப்பர் பெஷன்ஸ்' நிறுவனத்தின் அனுசரனையுடன், யூத் சீக்குகே பிரசன்ன தலைமையிலான யூத் ‘Army Northern Warriors’ அணியும், இலங்கை அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பிரிமா நிறுவனத்தின் அனுசரனையில் அசேல குனரத்தன அவர்களின் தலைமையில் யூத் ‘Army Eastern Warriors’ அணியும், டிமோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அனுசரனையில் தினேஷ் சந்திமல் தலைமையிலான யூத் ‘Army Southern Warriors’ அணியும், ஆசியா பெசிபிக் தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும் மெல்பன்மெடல் நிறுவனத்தின் அனுசரனையுடன் திஸர பெரேரா அவர்களின் தலைமையில் யூத் ‘Army Western Warriors’ அணியும், பங்குபற்றினர்.

இன்று தொம்பகொடையில் உள்ள இராணுவ கிரிக்கெட் மைதானத்தில் இடம் பெற்ற இறுதிப் போட்டியில் சீக்குகே பிரசன்ன தலைமையிலான ‘Army Northern Warriors’ அணியும், தினேஷ் சந்திமல் தலைமையிலான இராணுவ ‘Army Southern Warriors’ அணியும் போட்டியிட்டன.

இப் போட்டியில் டிமோ (பிரைவேட்) லிமிடெட் அனுசரனையின் கீழ் போட்டியிட்ட தினேஷ் சந்திமால் தலைமையிலான இராணுவ ‘Army Southern Warriors’ அணி வெற்றிபெற்றது. அதன்படி, பாணந்துறை சூப்பர் பெஷன் அனுசரனையின் கீழ் போட்டியிட்ட சிக்குகே பிரசன்ன தலைமையிலான ‘Army Northern Warriors’ அணி போட்டியின் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இப் போட்டி தொடரின் Army Northern Warriors’ அணியின் சீக்குகே பிரசன்ன சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டார். திசார பெரேரா சிறந்த பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்பட்டார். அத்துடன் போட்டி தொடரில் சிறந்த ஆட்டநாயகனாக தினேஷ் சந்திமால் மற்றும் ‘Army Southern Warriors’ சுமிந்த லக்க்ஷான் சிறந்த ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டனர்.

விருதுகள் வழங்கும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் கலந்து கொண்டதுடார். மேலும் இராணுவ பதவி நிலை பிரதானி மற்றும் இராணுவ விளையாட்டு சங்கத்தின் தலைவரும் பிரதி பதவி நிலை பிரதாணியுமான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன, பிரதி பதவி நிலை பிரதாணி மேஜர் ஜெனரல் துமிந்த சிரினாக, இலங்கை இராணுவ கிரிக்கெட் கழகத்தின் தலைவரும், இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ருவான் வனிக சூரிய, சிரேஷ்ட பதவி நிலை அதிகாரிகள், மற்றும் இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பலர் கலந்து கொண்டனர் இராணுவ கிரிக்கெட்டின் பிரதி தலைவரும், ஒருங்கிணைப்பாளரும்மான பிரிகேடியர் சிரான் அபேசேகர உட்பட இன்னும் சில மூத்த அதிகாரிகள் மற்றும் இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் திரு ஷம்மி சில்வா ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.

போட்டி இறுதியில் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் இப் போட்டியில் வெற்றியாளர்களுக்கும் இப் போட்டிக்கான அனுசரனையாளர்களுக்கும் வெற்றி கிண்ணங்கள் வழங்கி வைத்ததுடன் தனது வாழ்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

இலங்கை இராணுவம் நாட்டின் மிகப்பெரிய நிறந்தரமான அமைப்பாகும், இது 500 க்கும் மேற்பட்ட தேசிய மட்டத்தில் விளையாட்டு வீரர்களை கொண்டுள்ளதுடன் அனேகமானோர் தகுதி அளவில் தங்களது பங்களிப்பை வேறு துறைகளில் வழங்குகின்றனர். பல ஆண்டுகளாக சிறந்த சர்வதேச வெற்றியைப் பெற்றுள்ளதுடன் நாட்டிற்கும் இராணுவத்திற்கும் பெருமையையும் மரியாதையையும் கொண்டு வந்தனர். இவர்களில் கிராமிய மட்டத்தில் இருந்து 99% இராணுவத்தில் இணைந்தவர்கள் தங்கள் விளையாட்டுத் திறனை வளர்த்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதிப் போட்டியின் மதிய ஆரம்ப நிகழ்விற்கு பிரதம அதிதியாக பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் கலந்து கொண்டார். அத்துடன், இராணுவ கீதம் பாடப்பட்டதுடன், இறுதி போட்டியில் போட்டியிட்ட வீரர்கள் குறித்தும் போட்டி தொடர்பாகவும் தனது கருத்துக்களையும் தெரிவித்தார்.

இராணுவத் தளபதி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் வீடியோ பின்வருமாறு. Sports brands | FASHION NEWS