Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th September 2020 20:30:47 Hours

இலங்கை அமைகாக்கும் படையினை மினுஸ்மா படைத் தளபதி பாராட்டு

ஐக்கிய நாட்டின் அமைகாக்கும் மாலி மினுஸ்மா படைத் தளபதி லெப்டினன் ஜெனரல் டென்னிஸ் கில்லென்ஸ்போர் அவர்கள் மேற்கு ஆபிரிக்காவின் மாலியிலுள்ள ஐக்கிய நாடுகள் இலங்கை அமைதி காக்கும் படையணியினரை 2020 செப்டெம்பர் 19 ஆம் திகதி சந்தித்ததுடன், அவர்களின் வகிபாகம் தொடர்பாக அறிந்து கொண்டார்.

இங்கு வருகை தந்த மினுஸ்மா படைத் தளபதி இலங்கை அமைதி காக்கும் படையணியின் அதிகாரிகளால் வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து இலங்கை அமைதி காக்கும் படை குழுவின் பிரதி கட்டளைத் தளபதி மேஜர் மனோஜ் விதானகே அவர்களால் அப்படையின் வகிபாகம் தொடர்பாக விளக்கக்காட்சிகள் மூலம் அவருக்கு விளக்கமளித்தார்.

பின்னர், வருகையை மேற்கொண்ட தளபதி அதிகாரிகள் மத்தியில் உரையாற்றியதோடு, இலங்கை அமைதி காக்கும் படை குழுவின் படையினரால் மேற்கொள்ளப்பட்ட பணிகளைப் பாராட்டினார். இலங்கை அமைதி காக்கும் படை குழுவின் படையினரால் தொழில்வான்மை மற்றும் ஒழுக்கம் தொடர்பாக அவர் மேலும் எடுத்துரைத்தார்.

அதன்பிறகு, அவர் ஒரு குழு புகைப்படத்தில் கலந்து கொண்டதோடு, வளாகத்தில் ஒரு மரக்கன்றினையும் நட்டு வைத்தார். மேலும் அவர் குறித்த சிரேஷ்ட அதிகாரியவர்கள் முகாம் பகுதி, ஏனைய படை வீர்ர்களின் விடுதி மற்றும் லெவல்- I வைத்தியசாலை ஆகியவற்றை பார்வையிட்டார். இறுதியாக, இலங்கை அமைதி காக்கும் படை குழுவின் படையினர் பாராட்டுதலுக்கான அடையாளமாக படை தளபதிக்கு ஒரு நினைவு சின்னத்தினை வழங்கினர். மாலையில் ஒரு இரவு விருந்துபசார நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இலங்கை அமைதி காக்கும் படை குழுவிற்கான விஜயத்தில் லெப்டினன் ஜெனரல் டென்னிஸ் கில்லென்ஸ்போர் கிழக்கு பகுதி, துணைத் தளபதி கேணல் டேம் கல்லாப் மற்றும் படைத் தலைமையகத்தைச் சேர்ந்த சில சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். url clone | nike fashion