Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th September 2020 17:50:11 Hours

இராணுவத் தளபதியினால் 20,000 மா மர நடுகைத் திட்டம் ஆரம்பிப்பு

எதிர்வரும் இராணுவத்தின் 71 ஆவது நிறைவு தின விழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை பதவி-ஸ்ரீபுரவில் உள்ள இராணுவத்திற்கு சொந்தமான சிங்கபுர பண்ணையில் 1100 ஏக்கர் பரப்பளவில் (29) காலை மா மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இடம்பெற்றது.

இராணுவ ஆண்டு நிறைவு விழாக்களுக்காக தற்போது ரஜரட்டவில் உள்ள பாதுகாப்புத் தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் சின்கபுர பண்ணைக்குச் சென்று முதலாவது மா மரக்கன்றினை ‘செத் பிரித்’ மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் நட்டார். 20,000 மா மரங்களை நடும் குறித்த திட்டமானது நான்கு கட்டங்களாக நடப்படும். . 20,000 மா மரக்கன்றுகளை நடுவதற்காக ஒதுக்கப்பட்ட 100 ஏக்கரில் நிலப் பகுதிக்குள் முதல் கட்டமாக மொத்தம் 5000 மா மரக்கன்றுகள் சில நாட்களில் நடவு செய்யப்பட உள்ளன.

அதே வளாகத்தில், லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் மனிதனால் உருவாக்கப்பட்ட பயிர்ச்செய்கைக்குத் தேவையான நீர் சேமிப்பகங்களான இரண்டு குளங்களை புனரமைக்கும் திட்டத்தை ஆரம்பித்து குறித்த குளங்களுக்கு 'கஜபா வெவ' மற்றும் 'செபல வெவா' என்று பெரிட்டார். தொடங்கினார்.

மா மரத்தினை நட்ட பின்னர் லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் பிராந்தியத்திற்கான நீர்ப்பாசன பொறியாளர் திரு. ஏ. பிரகீத், திட்ட அதிகாரி லெப்டினன்ட் கேணல் டிஏபி திசாநாயக்க, பண்ணை அதிகாரி மேஜர் ஏஎம்சி குணசேகர, மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து குறித்த குளங்களை பார்வையிட்டனர். பண்ணைக்குள் 'கஜபா வெவ' மற்றும் 'செபல வெவ' முற்றாக புதுப்பிக்கப்படவுள்ளது.

நீர்ப்பாசன பொறியியலாளர் திரு. பிரகீத் அவர்கள் வருகை தந்த இராணுவத் தளபதி அவர்களுக்கு குறித்த இரண்டு களங்களையும் புதுப்பித்தல் மற்றும் விரிவாக்குவதன் நன்மைகள் மற்றும் மழைநீரை சேமிப்பதற்கான அவற்றின் திறன் மற்றும் விவசாய நோக்கங்களுக்காகவும் அண்டை விவசாயத்தின் நன்மை தொடர்பாகவும் விளக்கமளித்தார். இதேபோல், பண்ணை அதிகாரி ஒரு சுருக்கமான விளக்கக்காட்சியில் அடுத்த சில மாதங்களுக்குள் பண்ணைக்குள் உத்தேச பயிர் செய்கைத் திட்டம் குறித்தும், விரும்பிய இலக்குகளை எவ்வாறு அடைய முடியும் என்பதையும் விளக்கினார்.

அதன்பிறகு, பதவிய மற்றும் வஹல்கட நிறுவனத் தலைவர் திரு வசந்த அவர்கள் இப்பகுதியில் புகழ் பெற்றவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் சிக்கல்களை தளபதியிடம் விளக்கினார், தற்போதுள்ள விதைகளின் பற்றாக்குறை, உரங்கள் மற்றும் அவற்றின் அறுவடை விற்பனை போன்றவற்றை எடுத்துரைத்தார். குறித்த விடயங்களை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்படும் என்று அவர்களுக்கு தளபதி உறுதியளித்தார்.

பதவி-ஸ்ரீபுரவின் உதவி பிரதேச செயலாளர் செயலாளர், நீர்ப்பாசனத் துறை, நிலத் துறை, உள்ளூராட்சி மன்ற அதிகாரிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், 9ஆவது கஜாபா படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் பல நிர்வாகிகள் குறித்த திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். இறுதியாக இராணுவத் தளபதி பண்ணை அதிகாரிகளுக்கு ஒரு நெல் ஆலை மற்றும் நெல் உலர்த்தி ஆகியவற்றை பண்ணைக்குள் அமைக்குமாறு அறிவுறுத்தினார். குறித்த ஆலையினை உள்ளூர் விவசாயிகளால் நியாயமான கட்டணத்தில் பயன்படுத்தப்படலாம். Sports Shoes | Nike Shoes, Sneakers & Accessories