Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th September 2020 17:40:40 Hours

வெளிநாட்டில் உள்ளவர்களை அழைத்து வர தொடர் விமான சேவை -நொப்கொ தெரிவிப்பு

இன்று காலை (26) ஆம் திகதி அறிக்கையின் படி,வெளிநாட்டில் இருந்து வருகை தந்ந 12 பேருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் துபாயில் இருந்து வருகை தந்து முலங்காவில் மற்றும் அரலிய கிரீன் சிடி தனிமைபடுத்தல் மையத்தில் 2 நபர், கட்டாரில் இருந்து வருகை தந்து விடத்தபலை தனிமைபடுத்தல் மையத்தில் 06 நபர், அல்பேனிய சீபரில் இருந்து வருகை தந்து பயர்வே சன்செட் தனிமைபடுத்தல் மையத்தில் ஒருவரும், உக்ரைன்னியன் சீபரில் இருந்து வருகை தந்து ஹோட்டல் மவுன் லவினியா தனிமைபடுத்தல் மையத்தில் 3 நபர்களும் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர் என்று கொவிட் மையம் தெரிவித்துள்ளது.

இன்று (26) காலை 6.00 மணி வரை கந்தக்காடு மற்றும் சேனபுர போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களின் எண்ணிக்கை 650ஆகும். துபாயில் இருந்து EY264 விமான மூலம் 07 பயணிகள், கட்டாரில் இருந்து QR 668 விமானம் மூலம் 50 பயணிகள் மற்றும் கட்டாரில் இருந்து UL 218 விமான மூலம் 08 பயணிகள், இந்தியாவில் இருந்து UL1026 விமான மூலம் 122 பயணிகள் இன்று கொழும்பு வந்தடைந்தனர். மேலும் துபாயில் இருந்து UL226 விமான மூலம் பயணிகள் வரவுள்ளனர் என்று எதிர்பார்கப்படுகின்றது. அவர்கள் அனைவரும் முப்படையினரால் நிருவகித்து வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் (26) தனிமைப்படுத்தப்பட்ட 271 நபர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்பு தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். அவர்களில் நிபுன பூஸ்ஸ தனிமைப்படுத்தல் மையம் (12), கல்பிட்டிய ரிவல தனிமைப்படுத்தல் மையம் (04), பிடிபான தனிமைப்படுத்தல் மையம் (07), ராஜகிரிய ஆயுர்வேத தனிமைப்படுத்தல் மையம் (08), ஹோட்டல் டொல்பின் தனிமைப்படுத்தல் மையம் (29) மற்றும் தியதலாவை தனிமைப்படுத்தல் மையம் (12), பெரியகாடு தனிமைப்படுத்தல் மையம் (31) மற்றும் நொரைச்சோலை தனிமைபடுத்தல் மையத்தில் (168) தனிமைப்படுத்தப்பட்டவர்களாவர்.

அதேபோல், இன்று 26 ஆம் திகதி காலை வரையான காலப் பகுதியில் , 44,817 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு வெளியேறியுள்ளனர். இன்று (26 ) காலை அறிக்கையின் பிரகாரம் முப்படையினரால் நிருவகித்து வரும் 67 தனிமைப்படுத்தல் மையங்களில் 6,991 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று (25) திகதிக்குள் நாடாளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 1300 ஆகும். இதுவரை நாடாளாவிய ரீதியாக நடாத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 278,145 ஆகும்.

இதற்கிடையில், குணமடைந்த 16 கொவிட்- 19 தொற்றாளர்கள் இன்று (25) அதிகாலை வைத்தியசாலைகளை விட்டு வெளியேறயுள்ளனர். அவர்களில் 14 பேர் வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்களும் 2 பேர் கந்தகாடு புனர்வாழ்வு மையங்களில் உள்ளவர்களாகும்.

இன்று (26) காலை 6.00 மணியளவில், கந்தகாடு மற்றும் போதைப்பொருள் அடிமையானவர்களுக்கான சேனாபுர சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட கைதிகளின் மொத்த எண்ணிக்கை 648 ஆக உள்ளது. அவர்களில், தொற்றுக்குள்ளான 02 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். Running Sneakers Store | Nike React Element 87