27th September 2020 10:52:26 Hours
(ஊடக வெளியீடு)
துணிச்சல், பக்தி, ஒழுக்கம், விசுவாசம் மற்றும் சிறந்த திறமை, ஆற்றல் ஆகியவற்றின் சின்னமாக விளங்குவதும் நாட்டு மக்கள் அனைவராலும் போற்றப்படுவதும் மதிக்கப்படுவதுமான இலங்கை இராணுவம் தனது 71 ஆவது நிறைவாண்டு தினமான இராணுவ தினத்தை எதிர்வரும் 2020 ஒக்டோபர் 10 ஆம் திகதி கொண்டாடுகின்றது.
1949 ஆம் ஆண்டு 17 ஆம் திகதி இராணுவச் சட்டத்தின் மூலம் ஏர்ல் கைத்னஸின், பிரிகேடியர் ரோட்ரிக் சின்க்ளேரின் தலைமையில் அதனுடைய முதலாவது நிரந்தர படையினை ஆரம்பித்ததன் ஊடாக 1949 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதி இலங்கை இராணுவம் சிலோன் இராணுவம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் அதனுடைய சொந்த இராணுவ கல்லூரியினை தியதலாவையில் நிறுவியது, பின்னர் பிரிகேடியர் அன்டன் முத்துகுமரு அப்போதைய சிலோன் இராணுவத்தின் முதல் இலங்கைத் இராணுவத் தளபதியாக பதவியேற்றார். கடந்த 71 ஆண்டுகளில் அதன் வாழ்நாளில் ஒரு முழு அளவிலான இராணுவமாக மலர்ந்தது, இன்றுவரை இலங்கை இராணுவம் 22 இராணுவத் தளபதிகளால் திறம்பட கட்டளையிடப்பட்டு, குறித்த அமைப்பை திறப்பட செயற்படுத்தியுள்ளது. போர் படை, ஆதரவு படைகளின் உடனான 24 படையணிகளின் விரிவாக்கத்தினூடாக நாடு முழுவதிலும் உள்ள அனைத்து இனத்தினதும் இதயங்களையும் மனதையும் வென்றுள்ளது.
மிகவும் போற்றப்பட்ட போர்வீரர்களில் ஒருவரான கஜபா படையணியை சேர்ந்த லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் 23 ஆவது இராணுவத் தளபதியாக 2019 ஓகஸ்ட் 18 முதல் பதவியேற்று இன்று வரை பணியாற்றி வருகிறார். அதற்கு மேலதிகமாக பாதுகாப்பு தலைமை பிரதானியாக சேவையாற்றி வருகின்றார்.
நாட்டின் மிகவும் விரும்பப்பட்ட சேவை வழங்குநராகவும், நாட்டின் பாதுகாவலராகவும் இலங்கை இராணுவம், தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக அதன் முன்னுரிமை மற்றும் புத்துயிர் பெற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, தற்போது, சமூகம் சார்ந்த நலன்புரி திட்டங்கள், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் பேரழிவுகள், தேசிய அவசரநிலைகள், உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள், சாலைகள், விளையாட்டு மைதானங்கள், பாடசாலைகள் ஆகியவற்றின் அபிவிருத்தி போன்ற தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தின் 71 ஆவது நிறைவாண்டு விழா மற்றும் இராணுவ தினம் (ஒக்டோபர் 10) ஆகியவற்றினை முன்னிட்டு இந்த வருடம் 'சாரீரீக', 'பரிபோஹிக' மற்றும் 'உதேசிக' புத்தரின் நினைவுச் சின்னங்கள் உள்ள கண்டி ஸ்ரீ தலதா மாளிகை (செப்டம்பர் 28), அனுராதபுர ஜய ஶ்ரீ மகா போதிய (30 செப்டம்பர்) மற்றும் கதிர்காம கிரி வெஹெர (அக்டோபர் 05) வளாகங்களில் தொடர் மத வழிப்பாட்டு நிகழ்வுகள் இடம்பெறும்.
இராணுவத்தின் ஆண்டு நிறைவு விழாவின் ஆரம்ப கட்டமாக திங்கள்கிழமை 28 ஆம் திகதி கண்டியில், மகா சங்கத்தின் 71 உறுப்பினர்களுக்கு புத்த பூஜை, அன்னதானம் மற்றும் 'அட்ட பிரிகர' வழங்குதல், அனைத்து இராணுவக் கொடிகளிலும் 'பிரித்' ஓதுதல் மற்றும் ஆசீர்வாத நிகழ்வு இடம்பெறும். அனுராதபுர ஜெய ஸ்ரீ மகா போதி வளாகத்தில் வழக்கமான மற்றும் வண்ணமயமான கொடி ஆசீர்வாத நிகழ்வானது 30 ஆம் திகதி புதன்கிழமை பிரதம அதிதியான இராணுவத் தளபதி அவர்களின் பங்கேற்புடன் இடம்பெறும். அதே சந்தர்ப்பத்தில், இலங்கை இராணுவத்தின் சார்பில் இராணுவத் தளபதி அவர்கள் , ஜெய ஸ்ரீ மகா போதி வளாகத்தின் அட்டமஸ்தானாதிபதியின் (எட்டு புனித இடங்களுக்கும் முன்னுரை) அபிவிருத்திக்கு நிதி பங்களிப்பை வழங்குவார்.
அதே நாளில் (30) அனுராதபுரத்தில், படையினர் செய்த விலைமதிப்பற்ற தியாகங்களை மறந்துவிடாமல், லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, பல சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் இணைந்து 'அபிமன்சல -1' நலன்புரி நிலையத்திற்கு விஜயம் செய்வார்கள். அங்குள்ள ஒவ்வொரு விஷேட தேவையுடைய திறன் கொண்ட போர் வீரர்களுக்கும் சிறப்பு பரிசு பொருட்களை வழங்குவார்கள். பின்னர் நிறைவாண்டு மதிய உணவு விருந்திலும் கலந்து கொள்வார்கள்.
இராணுவ பௌத்த சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 'பிரித்' நிகழ்வில் , நாட்டிலுள்ள அனைத்து படைப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி 1000 இராணுவ வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர், இந் நிகழ்வு ஒக்டோபர் 1 ஆம் திகதி ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள இராணுவ தலைமையக வளாகத்தில் இடம் பெறவுள்ளதோடு, இராணுவத் தளபதி பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். இந்த நிகழ்வின் ஒரு கட்டமாக, அடுத்த நாள் (2) இராணுவத் தலைமையகத்தில் 71 துறவிகளுக்கு 'ஹீல் தான' (காலை உணவு) மற்றும் அன்னதானம் (சங்கிக தான) வழங்கும் நிகழ்வு இடம்பெறும்.
ஒக்டோபர் 3 ஆம் திகதி சனிக்கிழமையன்று இராணுவ இந்து சங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்து மத ஆசிர்வாத நிகழ்வுகள் கொழும்பு 13 இல் உள்ள ஸ்ரீ பொன்னம்பலம் வானேஷ்வரர் கோவிலில் இடம்பெறும். அங்கு இராணுவக் கொடிகளை ஆசீர்வதிக்கும் 'அபிஷேகம்' பூஜைகள் இடம்பெறும். இதற்கிடையில் இராணுவத்திலுள்ள முஸ்லிம் சங்கத்தினால் எற்பாடு செய்யப்பட்ட இராணுவத்தை ஆசீர்வதிப்பதற்கான இஸ்லாமிய பிரார்த்தனை நிகழ்வுகள் ஒக்டோபர் 4 ஆம் திகதி கொழும்பு 03 இல் உள்ள ஜும்மா மசூதியில் நடைபெறவுள்ளன. இந்த பிரார்த்தனை அமர்வில் அனைத்து முஸ்லிம் அதிகாரிகளும் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாயினரும் பங்கேற்பார்கள். மேலும் குறித்த இரண்டு புனித இடங்களின் அபிவிருத்திற்காக நன்கொடைகள் வழங்கப்பட உள்ளன.
கதிர்காம புனித கிரி வெஹெர வளாகம், தேவாலய வளாகங்கள் திங்கள்கிழமை (ஒக்டோபர் 5) இராணுவக் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டு அங்கு மத வழிப்பாடுகள் இடம்பெறும். கிரிவெஹர தாதுகோபுர வளாகத்தைச் சுற்றி அன்று மாலை 1500 தேங்காய் விளக்குகள் எற்றுவதற்கு முன், இரு இடங்களிலும் 'கிலன்பச மற்றும் முருத்தன் பூஜைகள்' (பிரசாதம்) இடம்பெறும்.'பூஜை' மற்றும் இராணுவக் கொடிகளுக்கு ஆசீர்வாதம் வழங்கும் நிகழ்வு இடம்பெறுவதற்கு முன்னர் .கதிர்காமத்தில் இராணுவத்தின் காவடி நடனக் கலைஞர்களின் பங்களிப்புடன் மத நிகழ்ச்சிகளின் வரிசையை அலங்கரிப்புடன் சிறப்பு 'பெரஹெர'வும் இடம்பெறும். அதே மாலை வளாகத்தில் வைத்து இராணுவத் தளபதியின் பங்கேற்புடன் முறையான மத நடமுறைகள் இடம்பெறும்.
அதேபோல், இராணுவ கிறிஸ்தவ சங்கத்தினால் ஏற்பாட்டில் இராணுவ கிறிஸ்தவ அங்கத்தவர்களின் பங்களிப்புடன் செவ்வாய்க்கிழமை (6) கோட்டையில் உள்ள புனித தோமஸ் தேவாலயத்தில் இராணுவத்தை ஆசீர்வதிப்பதற்காக ஒரு சிறப்பு ஆராதனை இடம்பெறும். தேவாலயத்தின் வளர்ச்சிக்கு நன்கொடையும் வழங்கப்பட உள்ளது.
வரவிருக்கும் 71 ஆவது இராணுவ நிறைவாண்டு விழாவை முன்னிட்டு, சமகாலத்தில் வீரம் மிக்க போர் வீரர்களின் நினைவுகள் புதன்கிழமை (7) லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் தலைமையில், பத்தரமுல்லையிலுள்ள போர் வீரர்களின் நினைவுச் சின்னத்தில் நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்களால், பாரம்பரிய 'ரண பேரா', 'ஹெவிசி', 'புரப்பட்டு', 'மாகுல் பெரா', 'கெட்டா பெரா' நிகழ்வுகளுக்கு மத்தியில் நினைவஞ்சலி செலுத்தப்படும்.
இராணுவத்தின் 71 ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள் இராணுவ தினமான ஒக்டோபர் 10 ஆம் திகதி சனிக்கிழமை காலிமுகத்திடலில் புகழ்பெற்ற மகத்தான கூட்டத்திற்கு மத்தியில் இடம்பெறும். இந்நிகழ்வானது இராணுவத் தளபதியினால் பிரதம அதிதியாக அழைப்பு விடுக்கப்பட்ட முப்படைகளின் தளபதியும் நாட்டின் ஜனாதிபதியுமான அதிமேதகு ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இடம்பெறும்.
71 ஆவது இராணுவ நிறைவாண்டு விழா தின அணிவகுப்பு நிகழ்வானது 2,000 க்கும் மேற்பட்ட படையினரின் பங்குபற்றுதலுடன் கொழும்பில் மிக விமர்சையாக இடம்பெறும். இதில் கலர் படை குழுக்கள், ஜனாதிபதி ட்ரஞ்சியன்ஸ், ஜனாதிபதியின் 'ரண பரஷுவ' (ஹட்செட்), ஜனாதிபதி வண்ணங்கள், இலங்கை இலேசாயுத காலாட்படையின் சின்னம் , போன்றவை கொடி உயர்த்தும் மற்றும் ஏனைய மத சம்பிரதாயங்களுடனான நிகழ்வுகள் இடம்பெறும். பகோடாவில் அடுத்த நாள் 11 ஆம் திகதி அனைத்து படையினருக்கும் இரவு உணவு விருந்துபசார நிகழ்வு இடம்பெறும். (நிறைவு)