Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th September 2020 15:49:38 Hours

குக்குலேகங்கயில் மனித உரிமைகள் தொடர்பான 28 ஆவது பயிற்சி பட்டறை

'மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதபிமான சட்டம் தொடர்பான 28 ஆவது பயிற்சியானது மூன்று வாரமாக இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் விஷேட அதிரடைப் படையினருக்காக குக்குலேகங்கயில் அமைந்துள்ள இலங்கை அமைதி ஒத்துழைப்பு நடவடிக்கை பயிற்சி நிலையத்தில் (21) ஆம் திகதி திங்கட்கிழமை இடம் பெற்றன.

நடைப் பெற்றுவரும் இந்த சுற்று பயிற்ச்சியானது, இராணுவ பயிற்சி பணிப்பகம் மற்றும் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனித உரிமை சட்ட பணிப்பகத்தின் தலைமையில் பாதுகாப்பு படையினரை 'மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதபிமான சட்ட பயிற்றுவிப்பாளர்களாக பயிற்றுவிப்பதற்கும், பயிற்சி அளிப்பதற்கும் ஆகும்.

இதுவரை, குக்குலேகங்கயில் அமைந்துள்ள இலங்கை அமைதி ஒத்துழைப்பு நடவடிக்கை பயிற்சி நிலையத்தில் 27 பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளதுடன், முப்படையில் உள்ள படையினர் மற்றும் அதிகாரிகளுக்கும் வெற்றிகரமாக பயிற்றுவிப்பாளர் பயிற்ச்சிகளை வழங்கியுள்ளனர். அவர்களில் இராணுவத்தில் 434 அதிகாரிகள் மற்றும் 950 படையினர், கடற்படையில் 63 கடற்படை அதிகாரிகள் மற்றும் 65 கடற்படையினர், விமானப்படையில் 53 விமானப்படை அதிகாரிகள், 57 விமானப்படையினர், விஷேட அதிரடைப் படையில் 33 அதிகாரிகள் மற்றும் 29 படையினர் உள்ளடங்குவர்.

திங்கள்கிழமை இடம் பெற்ற ஆரம்ப விரிவுரையை மனித உரிமைகள் பணிப்பகம் மற்றும் சர்வதேச மனிதபிமான சட்ட பணிப்பாகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பிரியந்த கமகே நிகழ்த்தினார். மேலும் இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் விஷேட பணிக்குழுவின் 20 அதிகாரிகள் மற்றும் 45 ஏனைய படையணிகளுக்கான பயிற்ச்சியானது தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. best shoes | Women's Nike Air Max 270 React trainers - Latest Releases , youth boys nike sunray sandals clearance outlet