Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd September 2020 10:50:20 Hours

பீரங்கி பிரிகேட் தளபதி 8 ஆவது எஸ்எல்ஏ படையணிக்கு உத்தியோகபூர்வ விஜயம்

பீரங்கி பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமில முனசிங்க அவர்கள் (15) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கிளிநொச்சியில் உள்ள 8 ஆவது இலங்கை பீரங்கி படைப்பிரிவுக்கு தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

இப் படைப் பிரிவுக்கு வருகை தந்த படைத் தளபதிக்கு பீரங்கி பிரிகேட் நுழைவாயிலில் இராணுவ சம்பிரதாய முறைப்படி படையினரால் வரவேற்பு மரியாதை வழங்கப்பட்டதுடன், அவர் 8 ஆவது இலங்கை பீரங்கி கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் டபிள்யூ.எஸ். ஏ. பி தர்மரத்ன அவர்களால் வரவேற்கப்பட்டார்.

பின்னர், கட்டளை அதிகாரி படைத் தளபதிக்கு நிர்வாக செயல்முறை தொடர்பாக விளக்கமளித்ததனைத் தொடர்ந்து படைத் தளபதி பீரங்கி படைப் பிரிவு பட்டாலியனின் படையினர்கள் மத்தியில் உரையாற்றினார்.

இறுதியாக, அவர் படை முகாமிலிருந்து வெளியேறுவதற்கு முன்பு அதிதிகள் புத்தகத்தில் கையொப்பமிட்டார். இந் நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் படையினர் பலர் பங்கேற்றனர். Nike air jordan Sneakers | Air Jordan