Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd September 2020 09:00:38 Hours

கடற்படை மற்றும் பொதுமக்களுடன் இணைந்து படையினரால் பூநேரின் கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வு

தற்போது நடைபெற்று வரும் தேசிய கடல் வள பாதுகாப்பு வாரம் (19-25 செப்டம்பர்) மற்றும் சர்வதேச கடலோர தூய்மைப்படுத்தும் நாள் -2020 (19 செப்டம்பர்) ஆகியவற்றினை கொண்டாடும் முகமாக, 66 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவானது 21 ஆம் திகதி திங்களன்று கிளிநொச்சி மாவட்டத்தின் பூநேரின் பகுதியில் உள்ள கௌத்தரிமுனை கடலோர கடற்கரையில் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தை முன்னெடுத்தது.

66 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு, 661 ஆவது பாதுகாப்பு படைத் தளபதி பிரிகேடியர் சாந்த ஹேவகே, சிவில் விவகார அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் ஏராளமான இராணவத்தினர் மற்றும் கடற்படையினர் உட்பட பலர் இந்த திட்டத்திற்கு தங்களது பங்களிப்பினை வழங்கினர்.

மகாவெலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினால் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வை வெற்றிகரமாக முடிக்க கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திருமதி ஆர் கேதீஸ்வரன், பூனகரி பிரதேச செயலாளர் திரு எஸ். பூனகரி பிரிவு திரு எஸ். கிறிஷநேந்திரன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் ஆகியோர் இராணுவம் மற்றும் கடற்படையினருடன் இணைந்து தங்களது பங்களிப்பை வழங்கினர். Best Nike Sneakers | Sneaker & Lifestyle News