Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd September 2020 11:00:20 Hours

இராணுவ பராமரிப்பாளர்களுக்கு மறுவாழ்வு தொடர்பான விழிப்புணர்வு பாசறை

இராணுவத்தின் 'ரணவீரு சேவ , அபிமன்சலா 1 , 2 , 3, மிஹிந்து செத் மெதுர மற்றும் 'ரணவீரு வள மையம்' ஆகிய அனைத்து பராமரிப்பு நிலையங்களின் பராமரிப்பாளர்களுக்கு மறுவாழ்வு செயல்முறையின் புதிய விடயங்கள் தொடர்பான வெவ்வேறு இரு பயிற்சி செயலமர்வுகள் ஆகஸ்ட் மாதம் 10 -14 மற்றும் ஆகஸ்ட் மாதம் 24-28ம் திகதிகளில் சுவாசஹானவில் அபிமன்சல 3 இல் இடம்பெற்றது.

ரணவீரு வள மையத்தின் வளவாளர்களால் நெறிப்படுத்தப்படும் இந்த செயலமர்வின் முக்கிய நோக்கமானது அம் மையங்களின் 59 பராமரிப்பாளர்களுக்கும் ஊனமுற்ற போர் வீர வீராங்கனைகளுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான நடைமுறைகள் குறித்து அறிவை வழங்குவதாகும்.

இந்த பயிற்சித் திட்டம் இராணுவ மறுவாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஷிரான் அபேசேகர மற்றும் சுவசாஹான அபிமன்சல 3 தளபதி கர்னல் அருண விஜேகுணவர்தன அவர்களின் நேரடி கண்காணிப்பில் இடம்பெற்றது. latest jordan Sneakers | Sneakers