Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st September 2020 12:27:03 Hours

தியதலாவ இலங்கை இராணுவ சேவைகள் படை முகாமில் புதிய விடுமுறை விடுதி திறப்பு

புதிதாக கட்டப்பட்ட படையினரின் நீண்டகாலத் தேவையான படையினர் விடுமுறை விடுதி (வாகோனர்ஸ் பங்களா) தியதலாவ இலங்கை இராணுவ சேவைகள் படை முகாம் வளாகத்திற்குள் வியாழக்கிழமை (17) ஒரு எளிய விழாவின் ஊடாக படையினர் வசமாக்கப்பட்டது.

விடுமுறை விடுதியின் கட்டுமானம் செலவு முன்னர் ரூ .140 லட்சம் என மதிப்பிடப்பட்டிருந்தது. சேவைகள் படையின் படைத் தளபதியின் படைத் தளபதியும் விவசாய மற்றும் கால்நடை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் இந்திரஜித் கந்தனராச்சி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் சேவைகள் படையின் நிலையத் தளபதி கேணல் அசோக அம்பன்பொல அவரகளினால் நிறைவு செய்யப்பட்டது.

8 ஆவது இலங்கை சேவைகள் படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் லெப்டினன் கேணல் சலுத ஜெயவர்தன மற்றும் படையினரின் பாராட்டத்தக்க அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பு ஊடாக ரூ .140 லட்சத்திற்கு மதிப்பிடப்பட்ட முழு திட்டம் ரூ. 85 லட்சத்திற்கு நிறைவு செய்யப்பட்டது.

விடுமுறை விடுதி மூன்று படுக்கையறைகள் இணைந்த குளியலறைகள், சூடு நீர் வசதி மற்றும் இதர வசதிகளைக் கொண்டுள்ளது.

இத் திட்டமானது இலங்கை சேவைகள் படையின் படைத் தளபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக கட்டுமானத்திற்கான நிதி படையினரின் 2019 ஆம் ஆண்டு நலனோம்பு நிதியத்தின் மூலம் திரட்டப்பட்ட வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

இராணுவ தொண்டர் படையணி தலைமையக பிரிகேடியர் (வழங்கல்) பிரிகேடியர் சுனில் பிங்கமகே அவர்களால் விடுமுறை விடுதி வியாழக்கிழமை (17) சுபவேளையில் திறந்து வைக்கப்பட்டது. Asics shoes | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ