Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th September 2020 12:40:26 Hours

சுவ தரணி திட்டத்திற்கு பாதுகாப்பு படைத் தலைமையகங்கள் ‘மரக்கன்றுகள் நாட்டி பங்களிப்பு

இராணுவ தலைமையகம் ஆரம்பித்த மூலிகை மருத்துவ தினத்தினை முன்னிட்டு சுவ தரணி தேசிய திட்டத்திற்கு இணையாக நாடு முழுவதும் உள்ள இராணுவ முகாம்களில் அரிய வகை மூலிகை மரக்கன்றுகளை வியாழக்கிழமை (17) பாதுகாப்பு படைத் தளபதிகள், படைப்பிரிவுத் தளபதிகள், பிரிகேட் தளபதிகள், மற்றும் கட்டளை அதிகாரிகள் தங்கள் கட்டளை நிலையங்களில் நாட்டி ஆரம்பித்து வைத்தனர்.

பனாகொடை மேற்கு பாதுகாப்புப் படை தலைமையகம் வளாகத்தில் படையினர் இந்த நிகழ்வின் போது இலுப்பை , அம்பலாட்டி, நெல்லி மற்றும் மாதுளை போன்ற 30 மூலிகை கன்றுகள் நாட்டப்பட்டன. மேற்கு பாதுகாப்புப் படை தளபதி மேஜர் ஜெனரல் சூலா அபேநாயக்க சார்பாக பிரிகேடியர் பொது பணி பிரிகேடியர் நலின் கொஸ்வத்த மற்றும் பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் வழங்கல் பிரிகேடியர் ஜகத் நிஷாந்த ஆகியோர் மேற்கு பாதுகாப்புப் படை படையினருடன் பங்குபற்றினர்.

இதேபோல் மத்திய பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஸ்தா அவர்களின் வழிகாட்டுதலில் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக வளாகத்தில் நூறு அரிய வகை மூலிகை மரக்கன்றுகள் அதே தினத்தில் (17) நாட்டினர்.

கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையகம் வளாகத்தில் 2020 செப்டெம்பர் மாதம் 17 ம் திகதி 100 மார்கோசா வேம்பு மரக்கன்றுகளை நாட்டினர்.

இத் திட்டம் கிளிநொச்சி பாதுகாப்புப் படை தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட அவர்களின் வழிக்காட்டுதலின் பேரில் பிரிகேடியர் பொது பணி பிரிகேடியர் அஜித் திசாநாயக்க , பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் வழங்கல் பிரிகேடியர் தீபால் ஹதுருசிங்க, சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினரின் பங்குபற்றலில் இடம்பெற்றது. Sports brands | FASHION NEWS