Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th September 2020 21:00:00 Hours

மேற்கு பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்புடன் ‘சிரச நிவச’வினால் மேலும் ஒரு விடு நிர்மானிப்பு

எம்டிவி / எம்பிசி, 'சிரசமீடியா வலையமைப்பின் 'சிரச நிவச' திட்டத்தின் மூலம் ,பாதுகாப்புத் தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டுதல்களின் கீழ் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 1ஆவது பொறியியலாளர் படையணியின் படையினர் மற்றும் இலங்கை இராணுவ முன்னோடி படையின் படையினர் இணைந்து ஹொரனை கோனாபோலவில் உள்ள ஒரு ஏழைக் குடும்பத்திற்காக ஒரு புதிய வீட்டைக் கட்டினர்.

மேற்கு பாதுகாப்பு பரைடத் தளபதி மேஜர் ஜெனரல் சூலஅபேநாயக்க அவர்கள் பொறியியல்படையினரின் திறமையான தொழில்நுட்பம்மற்றும் ஏனைய படையினரின் உதவியுடன் ‘சிரச நிவச’ திட்டத்தின்நிதி மற்றும் வளங்களின் மூலம் குறித் வீட்டுத் திட்டத்தை முடித்தார்.

வெள்ளிக்கிழமை (18) ஆம் திகதி இடம்பெற்ற வீட்டு திறப்பு விழாவில் ,மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி சார்பாக திட்ட அதிகாரி கேணல் துஷான் கணேபலெ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார், மேலும் எம்டிவி மற்றும் எம்பிசி வலையமைப்பின் தலைவி திருமதி நீத்ரா வீரசிங்க அவர்கள் 'சிரச நிவச' நிகழ்சித்திட்டம் சார்பாக கலந்து கொண்டார்.

வறுமையில் வாடும் திரு கே ருவான் பிரசன்னாஜித்தின் வாழ்க்கை நிலைமையானது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், செலவினங்களைக் குறைப்பதற்காக அனுசரணையாளர்கள் இராணுவத் தளபதியிடம் இராணுவ மனிதவளத்தையும் அவர்களின் கட்டுமானத் திறன்களையும் தேடி இராணுவத் தளபதியிடம் கேட்டுக்கொண்டனர்.

பண்டைய மரபுகளுக்கு இணங்க, அன்றைய பிரதம விருந்தினர்களும் வீட்டினை திறந்து வைத்து மங்கள விளக் கேற்றுதல் மற்றும் பால் பொங்கும் சடங்குகளில் பயனாளிகளுடன் கலந்து கொண்ட தோடு, புதிய வீட்டின் சாவியை பயணனாளிகளிடம் வழங்கினர். Sportswear Design | Air Jordan