Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th September 2020 13:30:48 Hours

இராணுவத்தினரால் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை பணிகள்

கண்டி பூவெலிகடை பிரதேசத்தில் கட்டிடம் ஒன்று நிலச்சரிவு காரணமாக இடிந்து மற்றொரு வீட்டின் மீது சரிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்கு இடையில் சிக்குண்டவர்களை மீட்கும் பணியில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 11 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவில் உள்ள 2 ஆவது இலங்கை இராணுவ சிங்க படையணி, 10 ஆவது கஜபா படையணி மற்றும் இலங்கை ரைபில் படையணியின் படையினர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவமானது இன்று காலை (20) இடம் பெற்றதுடன் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும், 3 படைப்பிரிவுகளைக் கொண்ட இராணுவப் படையினரால் மீட்கப்பட்டதாகவும் ஆரம்ப அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

கண்டி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்த பெய்து வந்த மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக மண் அரிப்பு மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டகூடிய அபாயம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பூவெலிகடயில் ஏற்பட்ட நிலச்சரிவில் மேலும் சிலர் உயிருடன் புதையுண்டதாகவும் தகவல்கள் மேலும் உறுதிப்படுத்தியுள்ளன, இவர்கள் பாதிக்கப்பட்ட வீடுகளில் வசிப்பவர்கள் என நம்பப்படுகிறது.

இதற்கிடையில், இந்த இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட ஒரு குழந்தை கண்டி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஸ்தா அவர்களின் மேற்பார்வையில் 11 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சரத சமரகோமேற்றும் 111 ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் நலின் பண்டாரநாயக்க, கட்டளை அதிகாரிகள் 2 ஆவது இலங்கை இராணுவ சிங்க படையணி, 10 ஆவது கஜபா படையணி மற்றும் இலங்கை ரைபில் படையணியின் கட்டளை அதிகாரிகளுடன் படையினரால் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். spy offers | yeezy sole turning blue color shoes FX6794 FX6795 Release Date - nmd legion ink goat costume ideas for boys