Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th September 2020 23:50:59 Hours

'சுவ தரணி' தேசிய நிகழ்ச்சித்திட்டதுடன் இணையும் 'துரு மிதுரு-நவ ரத்தக்'

'மூலிகை மருத்துவ தினத்தை'கொண்டாடும் முகமாக, சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவ நடைமுறைகள் அமைச்சின் 'சுவ தரணி' தேசிய திட்டத்திற்கு இணையாக, இலங்கை இராணுவத் தலைமையகத்தினால் தனது தலைமையகத்திற்கு செல்லும் சாலையின் இருபுறமும் மூலிகை மரக்கன்றுகள் வியாழக்கிழமை (17) ஆம் திகதி நடப்பட்டன.

இராணுவத் தளபதியின் 'துரு மிதுரு-நவ ரத்தக்' எண்ணக்கருவுடன் ஒருமித்து இந்நிகழ்ச்சியில், வேளாண்மை மற்றும் கால்நடை பணிப்பகத்தின் அழைப்பின் பேரில் பிரதம விருந்தினராக. பாதுகாப்புத் தலைமைப் பிரதானியும் இராணுவத் தளபதியும், கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் கலந்து கொண்டார். இது அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் நகர்ப்புற பசுமைகள் மற்றும் அரிய இன மரக்கன்றுகளை நடவு செய்யும் கொள்கையான சௌபாக்கிய டெக்ம கொள்கையுடன் தொடர்புடையதாக காணப்படுகின்றது.

வேளாண்மை மற்றும் கால்நடை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் இந்திராஜித் கந்தனஆராச்சி அவர்களினால் பிரதம அதிதியவர்கள் வரவேற்கப்பட்டதோடு,இத்திட்டத்தின் முதல் மூலிகை மரக்கன்றினை நடுவதற்காக அவர் அழைக்கப்பட்டார். இதில் அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்ச்சியின் போது படையினர் சந்தன மரம், ஆடதோடை, அனோதா, மீ, நிகா, ஹாதவரியா, அசோக், பிம்கோம்பா, கோஹோம்பா, கரந்தை, புலு மற்றும் நெல்லி போன்ற மூலிகை மருந்து மதிப்புள்ள 100 மரக்கன்றுகள் மற்றும் அழிந்துவரும் மரக்கன்றுகளையும் நட்டனர்.

மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை சந்தியின் திருப்ப முனையில் இருந்து இராணுவத் தலைமையகத்தின் நுழைவாயிலை நோக்கிய இந்த திட்டம் 'துரு மிதுரு-நவ ரத்தக்' இன் கீழ் உருவாக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் முதல் இராணுவம் அருகிலுள்ள சதுப்பு நிலங்களை நெல் வயல்கள், ஓய்வு மற்றும் உடற்பயிற்சி மைதானம் மற்றும் சிறுவர் பூங்காக்களாக மாற்றுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. best Running shoes | Nike