Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th September 2020 10:54:41 Hours

வீடுகளுக்கு 224 நபர்கள் அனுப்பி வைப்பு கோவிட் மையம் தெரிவிப்பு

இன்று காலை (16) ஆம் திகதி அறிக்கையின் படி 09 பேருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் ஆவார். இவர்கள் குவைட்டிலிருந்து வருகை தந்து ஜெட்விங் ப்ளு ஹோட்டல் மற்றும் இராஜகிரய ஆயுர்வேத மையத்திலிருந்த மூவருக்கும், அமாஹி ஆரியா ஹோட்டலிலிருந்த ஒருவருக்கும், ஐக்கிய அராபியவிலிருந்து வந்து நீர்கொழும்பு கரோலினா பீச் மற்றும் இராஜகிரிய ஆயுர்வேத மையத்திலிருந்த 04 பேருக்கும் , இந்தியா சீ மார்ஷல் தனிமைப்படுத்தலிலுள்ள ஒருவருக்கும் இந்த கொரோனா தொற்று நோய் இருப்பதாக இணங்காணப்பட்டுள்ளனர் என்று கோவிட் – 19 தேசிய தடுப்பு நடவடிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இன்று (12) காலை 6.00 மணி வரை கந்தக்காடு போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் எண்ணிக்கை 649 ஆகும். அவர்கள் 528 நபர்கள் மறுவாழ் கைதிகள், 67 ஊழியர்கள், 5 விருந்தினர் ஊழியர்கள், 48 குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நெருங்கிய தொடர்புடையவர் ஆவர்.

நேற்று இரவு டோகாரிலிருந்து QR 668 விமானத்தின் மூலம் 24 பயணிகளும், சென்னையிலிருந்து 6E 9030 விமானத்தில் ஒருவரும், சென்னையிலிருந்து UL 1026 விமானத்தில் ஒருவரும், மும்பாயிலிருந்து UL 1042 விமானத்தில் 03 பேரும், இலங்கைக்கு வருகை தந்தனர். இவர்கள் அனைவரும் முப்படையினரால் நிருவகித்து வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் தங்க வைக்கப்படவுள்ளனர்.

இன்றைய தினம் பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்பு 224 நபர்கள் தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் மையங்களான பூசாவிலிருந்து 07 பேரும், சிலோன் லோஜில் 11பேரும், மந்தரம் ஹோட்டலில் 79 பேரும், ஆயுர்வேதத்தில் ஒருவரும், பிரெஷ்கோ வோட்டார் விராவில் 11 நபர்களும், கயா பீச் ஹோட்டலில் ஒருவரும், பியகம விலேஜிலிருந்து 05 பேரும், பூனானையிலிருந்து 51 நபரும், பெரியகாடிலிருந்து 58 நபர்களும் வெளியேறியுள்ளனர்.

இன்று 16 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் 41,192 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு வெளியேறியுள்ளனர். அத்துடன் தற்போது முப்படையினரால் நிருவகித்து வரும் 59 தனிமைப்படுத்தல் மையங்களில் 6255 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

15 ஆம் திகதி நாடாளவியல் ரீதியாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 1810 ஆகும். இதுவரை நாடாளவியல் ரீதியாக நடாத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 257,477 ஆகும்.

கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ள 11 நபர்கள் பூரண குணமாகி வெளியேறியுள்ளனர். இதற்கிடையில், முழு குணமடைந்த பின்னர் 13 நேர்மறை COVID-19 வழக்குகள் இன்று (14) அதிகாலையில் மருத்துவமனைகளை விட்டு வெளியேறின. அவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்கள். அதன்படி, கண்டகாட்டில் உள்ள போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்துடன் தொடர்புடைய 638 நபர்கள் மீட்கப்பட்ட பின்னர் இதுவரை வெளியேறிவிட்டனர். புனர்வாழ்வு மையத்துடன் இணைக்கப்பட்ட மொத்தம் 11 பாதிக்கப்பட்ட நபர்கள் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். வெளிநாட்டிலிருந்து வந்தவர்களைத் தவிர வேறு எந்த சாதகமான சம்பவங்களும் சமூகத்திலிருந்து பதிவாகவில்லை என்பதால், அனைத்து இலங்கையர்களும் தங்கள் சுகாதார நடைமுறைகளைத் தொடரவும், சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி அதன் பரவலைத் தடுக்கவும் உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (நிறைவு) Running sport media | Gifts for Runners