Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th September 2020 19:02:21 Hours

அரசின் வேண்டுகோளின் பெயரில் சாரதி அனுமதி பத்திரம் அச்சிடுவதை இராணுவம் பாரமேற்பு

போக்குவரத்து மோட்டார் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட வேண்டுகோளின் பிரகாரம் இம் மாதம் (15) ஆம் திகதி பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது தலைமையில் இராணுவ சமிக்ஞை பிரதானி, தகவல் தொழில்நுட்ப பணிப்பாளர் அவர்களது பங்களிப்புடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டன.

2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 01 ஆம் திகதி மேன்மை தங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களின் பரிந்துரைப்பின் பேரில், தற்போது ஒரு தனியார் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் சாரதி அனுமதிப் பத்திரம் அச்சிடும் பணியை இராணுவத்திற்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மொத்த இடமாற்ற செயல்முறை திட்டம் 2021 ஜனவரி 01 ஆம் திகதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கலந்துரையாடலின் போது பாதுகாப்புப் படைப் பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, குழு முன்வைத்த சாத்தியக்கூறுகள் மற்றும் முன்மொழியப்பட்ட செயல் திட்டத்தை மறுஆய்வு செய்தார். உடனடி நடைமுறைக்கு வரும் திட்டத்தை கையகப்படுத்தும் முறைகளுடன் மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

மேலும், நாட்டின் எதிர்கால தேசிய அளவிலான தகவல் தொழில்நுட்ப திட்டங்களை பூர்த்தி செய்யக்கூடிய ‘தேசிய தகவல் தொழில்நுட்ப தீர்வுகளுக்கான இராணுவ மையம்’ என்ற திட்டத்தை நிறுவ அவர் ஒப்புதல் அளித்தார்.

இந்த ஒன்றுகூடலில் இராணுவ சமிக்ஞை பிரதானி மேஜர் ஜெனரல் அடீப திலகரத்ன, தகவல் தொழில்நுட்ப பணிப்பாளர் பிரிகேடியர் அசோக பீரிஸ் மற்றும் பல சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர். Best Nike Sneakers | Nike Shoes, Sneakers & Accessories