Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th September 2020 02:36:38 Hours

கொரோனா கட்டுப்பாட்டிற்கான அர்ப்பணிப்பிற்கு கிழக்கு படையினருக்கு இராணுவ தளபதி நன்றி தெரிவிப்பு

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் திருகோணமலையிலுள்ள 22 ஆவது படைப் பிரிவிற்கு பாதுகாப்பு தலைமை பிரதானியும், கோவிட் மைய தலைவர் மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இம் மாதம் (10) ஆம் திகதி உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.

படைப் பிரிவிற்கு விஜயத்தை மேற்கொண்ட இராணுவ தளபதியை நுழைவாயிலில் வைத்து கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சிந்தக கமகே மற்றும் 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்கள் வரவேற்றனர்.

படைப் பிரிவு தலைமையகத்திற்கு சென்ற இராணுவ தளபதி அவர்கள் இந்த படைப் பிரிவின் கீழுள்ள படையணிகளுக்கு மத்தியில் உரை நிகழ்த்தினார். இதன் போது கோவிட் – 19 கட்டுப்பட்டாக்குள் கொண்டு வருவதற்கு முப்படையினரால் வழங்கிய அர்ப்பணிப்பு சேவையை கௌரவித்து நன்றிகளை தெரிவித்தார். இந்த நிகழ்வில் 4 ஆவது படைக்கலச் சிறப்பணி, 4 ஆவது விஷேட படையணி மற்றும் லொஜஸ்டிக் கல்லூரியின் இராணுவ அங்கத்தவர்கள் பங்கேற்றிக் கொண்டனர்.

பின்னர் 22 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில் இராணுவ தளபதி அவர்களது தலைமையில் மூத்த அதிகாரிகளின் பங்களிப்புடன் கலந்துரையாடல் இடம்பெற்றன. இதன் போது இப்பிரதேசத்தில் முப்படையினரால் நிருவகித்து வரும் தனிமைப்படுத்தல் மையங்கள் தொடர்பான விடயங்களை கவனத்தில் கொண்டு கருத்துக்களை பரிமாறினார்கள் பின்பு இராணுவ தளபதி அவர்களினால் ‘துரு மிதுரு – நவ ரடக்’ எனும் தொணிப் பொருள் திட்டத்தின் கீழ் எமது நாட்டினுள் சமூகத்தை கட்டியெழுப்பும் திட்டங்கள் மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தினார்.

பின்பு இராணுவ தளபதி அவர்களினால் 22 ஆவது படைப் பிரிவு வளாகத்தினுள் மரநடுகைகள் மேற்கொண்டு மற்றும் குழுப்புகைப்படத்திலும் இணைந்து கொண்டார்.

இறுதியில் இராணுவ தளபதியவர்கள் ஊடக சந்திப்பின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் 22 ஆவது படைப் பிரிவின் வரலாற்று முக்கியத்துவத்தை முதலில் குறிப்பிட்டு கடந்த காலங்களில் எல்டிடிஈ பயங்கரவாத த்திற்கு எதிராக இராணுவத்தினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த விடயங்களையும், எமது நாட்டில் கோவிட் – 19 கட்டுப்படுத்துவதற்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் மேன்மை தங்கிய ஜனாதிபதி மற்றும் கௌரவ பிரதமர் அவர்களது வழிக்காட்டலின் கீழ் எமது இராணுவத்தினர் ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும், அத்துடன் அம்பாறை கடலில் எம்டி நியூ டயமன் எண்ணெய் கப்பலானது தீ விபத்துக்கு உள்ளாகிய சமயத்தில் இந்திய கடற்படையினருக்கு எமது கடற்படையினர் மற்றும் விமானப் படையினர் பாரிய பங்களிப்பை வழங்கி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு தங்களை அர்ப்பணித்துள்ளனர் என்றும் இவர்களது சேவையை கௌரவித்து நன்றிகளையும் ஊடகங்களுக்கு இராணுவ தளபதி தெரிவித்தார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத்தினரும் சகோதரி சேவைப் பணியாளர்களும் சமூகத்தில் நமது சொந்த குடிமக்கள், வெளிநாட்டவர்கள் அல்ல என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது என்று கூறினார். "அவர்கள் சீருடை காரணமாக வேறுபடுகிறார்கள், ஆனால் இன்னும் நம் சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்கிறார்கள். அவர்கள் வழக்கமான விடுப்பில் செல்லும்போது, அவர்கள் வெளிப்புறக் கூறுகளையும் சந்திக்கிறார்கள், மேலும் அவர்கள் தங்கள் முகாம்களுக்கு வெளியே போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் போன்றவற்றைக் கையாளும் சமூக விரோத கூறுகளுக்கு இரையாகலாம். பிடிபட்டால் இதுபோன்ற சமூக விரோத குற்றங்களில் ஈடுபடும் அனைவருக்கும் எதிராக அதிகபட்ச தண்டனையை ஏற்க நான் தயங்க மாட்டேன். நாங்கள் யாரையும் போதைப்பொருட்களைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம், முகாம்களுக்குள்ளும் இந்த மாதிரியான செயற்பாடுகளுக்கு நான் அனுமதிக்கமாட்டேன் தவறு செய்தவர்களுக்கு தண்டனையை வழங்குவேன் என்றும் இராணுவ தளபதி கருத்து தெரிவித்தார்.

பதவி உயர்வு தொடர்பான மற்றொரு கேள்விக்கு பதிலளித்த இராணுவ தளபதி அவர்கள் இராணுவ வரலாற்றில் முதல்முறையாக, 1436 அதிகாரிகள் மற்றும் 27,666 பிற தரவரிசைகள் தங்களது அடுத்த பதவிக்கு பதவி உயர்வுகளை வழங்கியுள்ளேன். அவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்ததாக அவர் கூறினார். “பதவி உயர்வு என்பது எல்லோரும் ஒரு தொழில் வாழ்க்கையில் விரும்பும் ஒன்று, அது அவர்களுக்கு முக்கியம். எனவே, அவர்கள் தங்கள் கடமைகளை முன்பை விட மகிழ்ச்சியுடன் செய்ய முடியும். இந்த மகிழ்ச்சி ஒருவர் தங்கள் கடமைகளை சிறப்பாகச் செய்வதற்குத் தேவைப்படும் ஒன்றாகும். ”என்று அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன் நாட்டில் இராணுவ மருத்துவமனைகளை நிறுவுவதற்குப் பின்னால் உள்ள மூலோபாயத்தையும் தெளிவுபடுத்தி வலியுறுத்தினார். buy shoes | Nike Shoes