Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th September 2020 15:10:20 Hours

கிளிநொச்சி ரெஜிமென்டல் சார்ஜென்ட் மேஜர்களுக்கு படையணி மற்றும் ஆளுமை மேம்பாட்டு செயலமர்வு

கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவெகொடவின் எண்ணக்கருவுற்கு அமைவாக கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ்லுள்ள அமைப்புகளின் ரெஜிமென்டல் சார்ஜென்ட் மேஜர்களுக்கு 'படையணி மற்றும் ஆளுமை மேம்பாடு' எனும் தலைப்பில் செயலமர்வு வெள்ளிக்கிழமை 11ம் திகதி கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைப்பெற்றது.

கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தளபதி தனது தொடக்க உரையில் செயலமர்வின் நோக்கம் மற்றும் ரெஜிமென்டல் சார்ஜென்ட் மேஜர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதன் காரணம் என்பவற்றை விளக்கினார். ரெஜிமென்டல் சார்ஜென்ட் மேஜர்களின் மரியாதை, பொறுப்பு மற்றும் வகைக்கூறல் ஆகியவற்றை நினைவுபடுத்தினார், மேலும் எதிர்காலத்தில் சிறப்பாக நிறைவேற்றுமாறு வலியுறுத்தினார்.

மேலும், பொது பணி அதிகாரி I (செயல்பாடுகள்), லெப்டினன்ட் கேணல் எம் சந்திரசேகர மற்றும் கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையக சமிஞ்சைப் படை அதிகாரி கட்டளை கேப்டன் எச்.சி.ஆர்.ஆர்.பி.கே.ரத்நாயக்க இராணுவ வீரர்களின் ஆளுமை மேம்பாடு ,நடைமுறை சூழ்நிலைகள் குறித்த பகுப்பாய்வு மற்றும் இராணுவ வீரர்கள் எதிர்கொள்ளும் ஒழுக்க விவகாரங்கள் தொடர்பாக விரிவுரைகளை நடத்தினர்.

இச் செயலமர்வில் 40 ரெஜிமென்ட் சார்ஜென்ட் மேஜர்கள் கலந்து கொண்டனர். Running sports | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov