Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th September 2020 15:45:20 Hours

நன்கொடையாளர்களது நிதியுதவியுடன் படையினரால் கட்டிடம் மீள்நிர்மானிப்பு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 55, 551 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் கரணாவாய் கிராம சேவக பிரிவின் கீழ் உள்ள பொது சுகாதார சேவைகள் அலுவலக கட்டிடம் 4 ஆவது சிங்கப் படையினரது ஒத்துழைப்புடன் திருத்தியமைக்கப்பட்டு இம் மாதம் (10) ஆம் திகதி நிருவாகத்திடம் கையளிக்கப்பட்டன.

இந்த அலுவலக கட்டிட மீள் நிர்மான பணிகள் நன்கொடையாளர்களான திருமதி வி. தியாகேந்திரன், திரு என். விஸ்னுகாந்தன் மற்றும் திரு ஏ விக்னேஸ்வரன் அவர்களது நிதி அனுசரனையுடன் இராணுவ கட்டிட நிர்மான பணிக் குழுவின் பங்களிப்புடன் இந்த கட்டிட மீள்நிர்மாணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த கட்டிட நிர்மான பணிகள் 55 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சிசிர பிலப்பிட்டிய அவர்களது வழிக்காட்டுதலின் கீழ் 551 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன அவர்களது கண்காணிப்பின் கீழ் 4 ஆவது சிங்கப் படையணியின் கட்டளை தளபதி லெப்டினன்ட் கேர்ணல் எஸ். தசநாயக அவர்களது தலைமையில் இந்த கட்டிட மீள் நிர்மான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. .

இம் மாதம் (10) ஆம் திகதி இந்த கட்டிடம் நன்கொடையாளர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் இராணுவத்தினரால் அதிகார பூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன. Buy Sneakers | Nike