Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th September 2020 10:42:46 Hours

வெளிநாட்டவர் எட்டு பேருக்கு கொரோனா கோவிட் மையம் தெரிவிப்பு

இன்று காலை (11) ஆம் திகதி அறிக்கையின் பிரகாரம் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த எட்டு நபர்களுக்கு கொரோனா தொற்றுநோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளன. இவர்கள் மாலைதீவிலிருந்து வந்த (5) பேரும், சிங்கப்பூரிலிருந்து வந்த ஒருவரும், சவுதி அரேபியாவிலிருந்து வந்த ஒருவருக்கும் மற்றும் டுபாயிலிருந்து இலங்கைக்கு வந்து ஒருவரும் என இணங்காணப்பட்டுள்ளனர். இவர்கள் தனிமைப்படுத்தல் மையங்களான கேகாலை லோங் பீச், இராஜகிரிய ஆயூர்வேதம் மற்றும் ஹம்பாந்தோட்ட சங்கிரி லா ஹோட்டலிலும் தனிமைப்படுத்த பட்டிருந்தனர் என்று கோவிட் – 19 தேசிய தடுப்பு நடவடிக்கை மையம் தெரிவித்தது.

இன்றைய காலை 6.00 மணி அறிக்கையின் படி கண்டகாடு புணர்வாழ்வு மையத்திலிருந்து கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகிய நபர்களது முழு விபரம் 640 ஆகும். இவர்களில் 519 பேர் புணர்வாழ்வளிக்கப்பட்ட கைதிகளும், 67 ஊழியர்களும், 5 விருந்தினர்களும்,வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்த 48 குடும்ப அங்கத்தவர்களுடன் தொடர்புடைய ஒருவரும் உள்ளடக்கப்படுவார்கள்.

சவூதி அரேபியாவிலிருந்து QR 668 விமானத்தில் 67 பயணிகளும், டுபாயிலிருந்து EK 648 விமானத்தில் 420 பயணிகளும், சவூதி அரேபியாவிலிருந்து SUS 7722 A விமானத்தில் 07 பயணிகளும், ஜப்பானிலிருந்து UL 455 விமானத்தில் 03 பயணிகளும் இன்று காலை இலங்கையை வந்தடைந்தனர். அத்துடன் இந்தியாவிலிருந்து CE 9034 விமானத்தின் மூலம் இன்னும் பயணிகள் வரவுள்ளனர். இவர்கள் முப்படையினரால் நிருவகித்து வரும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இன்றைய தினம் 115 பேர் பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்பு தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து வெளியேறியுள்ளனர். இவர்கள் 49 பேர் வெலிசரையிலிருந்தும், 07 பேர் நிபுன பூசாவிலிருந்தும், மிகிந்தலையிலிருந்து ஒருவரும், ஜெட்விங் பீச் 40 பேரும், கொஸ்கொட சேரடனிலுருந்து 03 நபரும், சீகிரிய விலேஜிலிருந்து 12 பேரும், ஹெயிகித்தையிலிருந்து மூவரும் ஆவர். அத்துடன் இன்று வரை 39,734 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு வீடுகளுக்கு சென்றுள்ளனர். அத்துடன் முப்படையினரால் நிருவகித்து வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் 6,206 நபர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 1810 ஆகும். அத்துடன் இன்று வரைக்கும் மேற்கொள்ளப்பட்ட முழுமையான பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 246,888 ஆகும்

மேலும் இன்றைய தினம் கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியிருந்த 9 பேர் சிகிச்சையின் பின் பூரன குணமாகி மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளனர். இவர்களில் 07 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள், 02 பேர் கந்தகாடு புணர்வாழ்வு மையத்திலிருந்தவர்கள் ஆவர். அத்துடன் கந்தகாடு மையத்திலிருந்து கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியவர்கள் 639 ஆகும். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்கள் 13 பேர் ஆவர் அத்துடன் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை தவிர உள்நாட்டினுள் எவரும் கொரோனா தொற்றுநோய்க்கு உள்ளாகியுள்ளதாக பதிவாகவில்லை அத்துடன் அனைத்து இலங்கையர்களும் தங்கள் சுகாதார நடைமுறைகளைத் தொடரவும், சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி அதன் பரவலைத் தடுக்க உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (நிறைவு) Best jordan Sneakers | Air Jordan Release Dates Calendar