Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd September 2020 22:28:02 Hours

கோவிட் மையத்தின் புதிய அறிக்கை

“ தற்போது வெளிநாடுகளில் இருந்து எமது நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்கள் மட்டுமே கோவிட் – 19 கொரோனா தொற்று நோய்க்கு இலக்காகியுள்ளதாக உறுதிப்படுத்தப்படுகின்றன. மேலும் ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு பின்னர் அதாவது கடந்த இரண்டு மாதங்களினுள் நாட்டிற்குள் எவரும் கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளதாக பதிவாகவில்லையென்று கோவிட் – 19 மையத்தின் தலைவரும், பாதுகாப்பு பதவிநிலை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இன்று (3) ஆம் திகதி இடம்பெற்ற கோவிட் மைய ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார்.

இன்றைய நிலவரத்தின்படி இலங்கையிலுள்ள 74 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 8026 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் இது வரைக்கும் மொத்தமாக 35,000 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு தங்களது வீடுகளுக்கு வெளியேறியுள்ளனர். மேலும் வெளிநாடுகளிலிருந்து 35,000 க்கும் மேற்பட்ட இலங்கை வெளிநாட்டவர்கள் 105 நாடுகளிலிருந்து எமது நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். ஆயினும் நம் சமுதாயத்திற்குள் வைரசின் அச்சுறுத்தல் ஒழிப்பதில் இருந்து வெகு தொலைவில் உள்ளோம் அத்துடன் நாம் உரிய முறையில் சுகாதார நடைமுறைகளை பேணுவதால் நாம் இந்த வைரஸ் நோயிலிருந்து விடுபிட்டு பாதுகாப்பாக இருக்கின்றோம். நாம் எமது பொறுப்புக்களை சரியான முறையில் மேற்கொண்டால் எமது சமூகத்திற்கு பரவக்கூடும் இந்த கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியும் என்று இராணுவ தளபதி அவர்கள் வலியுறுத்தினார்.

இந்த ஊடக சந்திப்பில் சுகாதார அமைச்சர் மதிப்புக்குரிய திருமதி பவித்ரா வன்னியாரச்சி , கோவிட் மைய தலைவரும், இராணுவ தளபதியுமான லெப்டின ன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா , சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் எஸ். ஶ்ரீதரன் போன்றோர் பங்கேற்றுக் கொண்டனர்.

இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பிரமுகர்களை இராணுவ தளபதி அவர்கள் வரவேற்றார்.

இராணுவ தளபதி அவர்கள் முதலில் உரையாற்றுகையில் திருப்பியனுப்பும் பணியின் நிலை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளின் நிலைகள் ஆகியவற்றை குறிப்பிட்டு எமது நாட்டிற்கு வெளிநாட்டவர்கள் தொடர்ந்து வருகிறார்கள். தற்போது 35,000 நபர்கள் வெளி நாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளனர். 50,000 நபர்கள் எமது நாட்டிற்கு வெளிநாடுகளிலிருந்து வரவுள்ளனர். அத்துடன் அனைத்து தனிமைப்படுத்தல் மையங்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதோடு இந்த மையங்களுக்கு இராணுவம் ஒரு மருத்துவ அதிகாரிகளையும் நியமித்துள்ளது என்று இராணுவ தளபதி வலியுறுத்தினார்.

மேலும் இராணுவ தளபதி கருத்து தெரிவிக்கையில் கொரோனா தடுப்பு செயற்பாட்டிற்கு மேன்மை தங்கிய ஜனாதிபதி, கௌரவ பிரதமர், சுகாதார அமைச்சர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்கள், கடற்படை, விமானப் படைத் தளபதி மற்றும் முப்படையினரது பாரிய ஒத்துழைப்புடன் இந்த கொரோனா தடுப்பு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது என்றும் இவர்கள் அனைவருக்கும் இராணுவ தளபதி அவர்கள் நன்றிகளை தெரிவித்தார்.

“கொடிய வைரஸ் பரப்புவதை திறம்பட தனித்த ஒரு தேசமாக இலங்கை உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்க முடியும்” என்று அவர் குறிப்பிட்டார். சுமார் 30 முப்படை மருத்துவர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதன் போது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் எஸ். ஶ்ரீதரன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சமூகத்தில் சீரற்ற சோதனைகளும் நடத்தப்படுகின்றன என்று தெரிவித்தார். மேலும் சிவில் ஏவியேஷன், மற்றும் விமானப்படை அதிகாரிகள் ஆகியோருடன் கலந்தாலோசித்து விமான நிலையத்தில் பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டு COVID-19 க்குப் பின்பு சுற்றுலாவின் எதிர்கால வாய்ப்புகள் குறித்தும் அவர் விளக்கமளித்தார். buy shoes | Nike