Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th August 2020 10:59:38 Hours

வன்னி வீட்டுத் திட்டத்தின் கீழ் நிர்மானிக்கப்பட்ட இரு வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மஹிந்தலை தந்திரிமலை பகுதியில் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த இரு நபர்களுக்கு இராணுவத்தினரால் நிர்மானிக்கப்பட்ட புதிய இரு வீடுகள் இம் மாதம் (13) ஆம் திகதி வியாழக் கிழமை பயனாளிகளுக்கு இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டன.

21 ஆவது படைப் பிரிவின் வழிக்காட்டலின் கீழ் 212 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் அனில் பீரிஸ் அவர்களது தலைமையின் கீழ் 7 ஆவது (தொ) இலங்கை சமிக்ஞை படையணி மற்றும் 5 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் முழுமையான பங்களிப்புடன் இந்த வீட்டு கட்டிட நிர்மான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த வீடு நிர்மானிப்பதற்கான நிதியுதவிகள் நன்கொடையாளரான திரு மலின் ராஜபக்‌ஷ அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த புதிய வீடுகள் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசிங்க அவர்களினால் பயனாளிகளான திரு. பி. சந்திரசேகர மற்றும் திரு. எஸ்.பி. லயனல் செனவிரத்ன போன்றோருக்கு கையளிக்கப்பட்டன. இவர்கள் மஹிந்தலை பகுதியிலுள்ள சமதிகம, சிப்பிகுளம் பகுதிகளில் வாழ்ந்து வந்தார்கள். பயனாளியான சந்திரசேகர நோய்வாய்ப்பட்டு மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் நீண்ட காலமாக கஸ்ட்டத்திற்கு மத்தியில் வாழ்ந்து வந்தார். மற்ற பயனாளியான திரு எஸ்.பி லயனல் செனெவிரத்ன அவர்கள் துப்பிடியாவெவ பகுதியில் வாழ்ந்து வந்தார். இவர்களது இந்த துயரநிலையை அவதானித்து இராணுவத்தினரால் இந்த வீடுகள் நிர்மானித்து கையளிக்கப்பட்டன.

இந்த இரு பயனாளிகளுக்கு வீடு கையளிப்பு நிகழ்வின் போது இராணுவத்தினரால் அத்தியாவசிய பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் இந்த நிகழ்வில் 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விகும் லியனகே, 212 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் அனில் பீரிஸ், மிஹிந்தலை பிரதேச செயலாளர், நன்கொடையாளியான திரு மாலின் ராஜபக்‌ஷ மற்றும் பயனாளிகளின் குடும்பத்தினர் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sports brands | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE