Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st July 2020 09:19:57 Hours

‘யாழ்ப்பாணத்திலுள்ள இளைஞர், யுவதிகளின் திறமைகளை மேம்படுத்தும் இன்னிசை நிகழ்ச்சி

யாழ் குடா நாட்டிலுள்ள நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகளின் கலைத் திறமைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் ‘யாழ் குட் டெலன்ட் 2020’ மெகா பாடல் மற்றும் நடன நிகழ்ச்சியின் இறுதி அங்க நிகழ்வானது இம் மாதம் (2) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை யாழிலுள்ள தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக வடமாகாண ஆளுநர் மதிப்புக்குரிய திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ், யாழ் இந்திய தூதரகத்தின் தூதுவர் திரு எஸ். பாலசந்திரன் மற்றும் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரிய அவர்கள் வருகை தந்து சிறப்பித்தனர்.

இந்த இன்னிசை நடன போட்டியானது 2020 ஆம் ஆண்டு பெப்ரவாரி மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு யாழ் பல்கலைக்கழக பட்டதாரி நடுவர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது. பின்னர் நாட்டில் ஏற்பட்ட கோவிட் – 19 தொற்று நோய் நிமித்தம் ஏப்ரல் மாதம் இடம்பெறவிருக்க இருந்து இறுதிச் சுற்றுப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டு இடை நிறுத்தப்பட்டு இருந்தன பின்னர் இந்த இறுதிச் சுற்றுப் போட்டியானது இம் மாதம் 02 ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த இன்னிசை மற்றும் நடன நிகழ்வுகளின் இறுதிச் சுற்றுப் போட்டியில் பாடல் பிரிவில் சிறந்த பாடகராக ஜகதீஸ்வரன் மதுசிஹான் அவர்களும் இரண்டாவது இடத்தை ஆதித்திய ஜயபாலன் அவர்களும் பெற்றுக் கொண்டார்கள். நடன பிரிவில் சிவலோகநாதன் மேரி மெடொனா அவர்கள் முதலாவது இடத்தையும், இரண்டாவது இடத்தை வானதி விஸ்வநாதன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். இவர்கள் இருவரும் 100,000.00 மற்றும் 50,000.00 ரூபாய் பரிசுகளை பிரதம அதிதிகளின் கரங்களினால் பெற்றுக் கொண்டு கௌரவிக்கப்பட்டார்கள்.

இறுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்றுக் கொண்ட போட்டியாளர்களுக்கு சான்றிதழ்கள் ரொக்கப் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் மதகுரு தலைவர்கள், யாழ் மாவட்ட செயலாளர் யாழ் மாவட்டத்திற்கான இந்திய தூதரகத்தின் தூதுவர் மற்றும் அவரது பாரியாரும் ,யாழ், வன்னி, கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதிகள், வடமாகாண கடற்படை கட்டளை தளபதி, 51, 52 ,55 ,65, 66 மற்றும் 68 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதிகள் மற்றும் வடக்கு முன்னரங்க பாதுகாப்பு படைத் தளபதி, வடமாகாண ஆளுநர் , மாவட்ட செயலாளர். கல்வி திணைக்களத்தின் அதிகாரிகள், யாழ் பல்கலைக்கழக பீடாதிபதிகள், முப்படையைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் பொது மக்கள் இணைந்து கொண்டனர்.

மேலும் இந்த அரையிருதிப் போட்டியல் 20 போட்டியாளர்கள் பங்கேற்றுக் கொண்டனர். இதில் ஐவர் இரு பிரிவிலும் மொத்தமாக 10 பேர் நடனம் மற்றும் பாடல் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு இந்த நிகழ்வினூடாக சான்றிதழ்கள் மற்றும் பரசுகள் வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sport media | Nike