Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th July 2020 12:14:43 Hours

68 ஆவது படைப் பிரிவின் புதிய படைத் தளபதி பதவியேற்பு

பிரிகேடியர் உபாலி ராஜபக்ஷ அவர்கள் 68 ஆவது படைப் பிரிவின் 10 ஆவது படைத் தளபதியாக இம் மாதம் (18) ஆம் திகதி முல்லைத்தீவு கோம்பாவில்லில் அமைந்துள்ள தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக தனது பதவியை சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு பொறுப்பேற்று கொண்டார்.

தலைமையகத்திற்கு வருகை தந்த புதிய படைத் தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து வரவேற்கப்பட்டார்.

பின்னர் புதிய படைத் தளபதி அவர்களினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகைகள் மேற்கொண்டு தலைமையகத்திலுள்ள அனைவருடன் குழுப்புகைப்படத்திலும் இணைந்து கொண்டு படையினர் மத்தியில் உரையையும் நிகழ்த்தினர்.

இந்த நிகழ்வில் கட்டளை தளபதிகள், கட்டளை அதிகாரிகள் , இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Best Sneakers | Air Jordan