Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th July 2020 22:51:01 Hours

தேர்தல் ஆணையாளர் , கோவிட் மைய தலைவர், பதில் பொலிஸ்மா அதிபர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பங்களிப்புடன் தேர்தல் தொடர்பாக கலந்துரையாடல்

ராஜகிரியவில் அமைந்துள்ள கோவிட் – 19 தேசிய தடுப்பு செயல்பாட்டு மையத்தில் எதிர்வரும் பொது தேர்தல் காலங்களில் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலும், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு வாக்களிப்பு தொடர்பான விடயங்களை ஆராய்வதற்கு கலந்துரையாடலொன்று இம் மாதம் (6) ஆம் திகதி இடம்பெற்றது. இந்த ஒருங்கிணைப்பு கலந்துரையாடலில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, கோவிட் மைய தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் திரு. சந்தன விக்ரமரத்ன போன்றனர் இணைந்துகொண்டனர்.

அரசாங்கத்தால் நடத்தப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் கட்டாய தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள், வீடு / சுய தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கோவிட்-19 நோயாளிகள் மற்றும் அத்தகைய தேவைகளை எவ்வாறு ஒருங்கிணைக்க முடியும் எனும் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல் - 2020 ஐ சீராக நடத்த முப்படையினர், பொலிஸார் மற்றும் சுகாதார நிர்வாகிகளினதும் விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

அத்துடன் இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு பாரிய சேவைகள் ஆற்றிய கோவிட் மைய தலைவர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கும் தேர்தல் ஆணையாளர் இத்தருணத்தில் நன்றிகளை தெரிவித்தார்.

மேலும் இந்த கலந்துரையாடல் கூட்டத்தின் போது தேர்தல் வாக்களிப்பு காலங்களில் சுகாதார அதிகாரிகளினால் முன் வைக்கும் சுகாதார வழிக்காட்டுதல்களில் இணைந்திருக்க வேண்டியதன் அவசியத்தையும், அத்துடன் ஏதேனும் அவசரநிலை மற்றும் அச்சுறுத்தல் மீண்டும் ஏற்பட்டால் எடுக்க கூடிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Best Sneakers | THE SNEAKER BULLETIN