Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th July 2020 10:55:54 Hours

விஷேட தேவையுடைய படையினருக்கு புதிய வீடு வழங்கள்

பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்களால் தனிப்பட்ட ஒருங்கினைப்பின் முறையில்,முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் (ஓய்வு) தயா ரத்நாயக்க, ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகர,பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, ரணவிரு சேவா அதிகார சபை, பாதுகாப்பு அமைச்சு, இராணுவ படையினர் விவகார பனிப்பகம் மற்றும் இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி தலைமையகம் ஆகியவற்றின் ஆதரவுடன் ,கண் பார்வை மற்றும் உடல் அவயங்களை இழந்த போர் வீரர் ஒருவருக்கு கொக்கரெல்ல நேஷனல்வத்தேயில் இராணுவத்தினரால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு இன்று (4) ஆம் திகதி காலை கையளிக்கப்பட்டன.

1991 ஆம் ஆண்டு இடம் பெற்ற யுத்ததில் பலத்த காயம் அடைந்து கண் பார்வையற்ற, இரு கரங்களையும் இழந்த இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியைச் சேர்ந்த கோப்ரல் ஈ. பி மஹிந்த எதிரிசூரிய அவரின் வீடு திறப்பு விழாவிற்கு பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, மற்றும் பிரதி பதவி நிலை பிரதானி மற்றும் இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ரசிக பெனாண்டோ உட்பட சில சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சிசின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்ரானி குணரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாத போரில் முக்கியமான காலகட்டங்களில் அர்ப்பணிப்பு மற்றும் போர் முன்னணியில் இருந்த வீரரின் போர்க்கள செயல்கள் ஆகியவற்றைப் பாராட்டும் வகையில் பாதுகாப்பு அமைச்சினால் நிர்வகிக்கப்படும் 'மெத் செவன' போர் வீரருக்கான 'வீட்டுவசதி மேம்பாட்டுத் திட்டம் கட்டுமானத்திற்கான நிதியை வழங்கியதுடன், அவரது படையணியான , இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படைத் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி வீரர்களின் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் பயன்படுத்தி முழு கட்டுமான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரசிக பெர்னாண்டோ மற்றும் பயனாளியான கோப்ரல் ஈ. பி. மகிந்த எதிரிசூரிய ஆகியோர் பிரதம அதிதியை வரவேற்ற பின்னர் ரிபன் வெட்டுதல், சமய ஆசிர்வாத நிகழ்வுகள், சம்பிரதாய பால் பொங்கள் நிகழ்வு மற்றும் அவர்களுக்கு வீட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் பயனாளி தனது உரையில், இந்த வீட்டின் கட்டுமான திட்டத்திற்கான பாதுகாப்பு செயலாளர், முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் (ஓய்வு) தயா ரத்நாயக்க, ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகர ஆகியோரின் ஆர்வம் மற்றும் தற்போதைய இராணுவ தளபதியினால் பயனாளியின் இரண்டு மகன்களில் ஒருவருக்கு இலங்கை பீரங்கி படையணியின் வேலைவாய்ப்பு வழங்கியதுடன், அவரது புதிய இல்லத்தை நிர்மாணிக்க ஆதரவளித்த அனைவருக்கும் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

இந்த நிகழ்வின் முடிவில் பயனாளிக்கு ஒரு சிறப்பு நினைவு பரிசை வழங்கியதுடன் பிரதம அதிதியான , பாதுகாப்பு செயலாளருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

குடும்ப உறவினர்கள், நலம் விரும்பிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். bridgemedia | Women's Designer Sneakers - Luxury Shopping