Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd July 2020 10:01:24 Hours

155 பேர் கந்தகாடு தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொவிட் மையம் தெரிவிப்பு

ஜபானிலிருந்து யூஎல் – 455 விமானம் மூலம் இன்று (03) ஆம் திகதி 261 பேர் இலங்கைக்கு வருகை தந்தனர். இவர்கள் அனைவரும் இலங்கை முப்படையினரால் நிர்வாகித்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொவிட் – 19 தேசிய தடுப்பு செயல்பாட்டு மையத்தினால் இன்று (03) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அம்பாறை (03) மற்றும் ராஜகிரிய (86) ஆகிய இடங்களில் மொத்தம் 89 பேர் தனிமைப்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனையின் பின்னர் தனிமைப்படுத்தல் சான்றிதல்களுடன் இன்று (03) தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டனர்.

அத்துடன் (3)ஆம் திகதி வரை முப்படையினரால் நிர்வாகித்து வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் மொத்தம் 17,764 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டுள்ளனர்.தற்போதைய நிலவரப்படி, நாடு முழுதும் முப்படையினரால் நிர்வாகித்து வரும் 50 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 6,200 நபர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளனர் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

மேலும், ஜிந்துபிட்டி பகுதியில் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்ததை தொடர்ந்து குறித்த நபர் வசித்த பகுதியை சேர்ந்த 155 பேர் வியாழக்கிழமை (2) ஆம் திகதி தனிமைப்படுத்தல் பரிசோதனைக்காக கந்தகாடு தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. spy offers | ナイキ エア マックス エクシー "コルク/ホワイト" (NIKE AIR MAX EXCEE "Cork/White") [DJ1975-100] , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!