Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd June 2020 05:44:55 Hours

மாலைதீவில் இருந்து வருகை தந்த ஒரு வெளிநாட்டவருக்கு கொவிட் -19 தொற்றுள்ளதாக நெப்கோ தெரிவிப்பு

டோஹாவிலிருந்து விமான இல கியூஆர் 668 விமானத்தினூடாக 03 பயணிகள் மற்றும் துபாயிலிருந்து ஈகே 2528 விமானத்தினூடாக 271 பயணிகள் இன்று காலை 23 ஆம் திகதி இலங்கை வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்படுவர் என ராஜகிரியவில் அமைந்துள்ள கொவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் 23 ஆம் திகதி காலை வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்னேரிய (30) மற்றும் தியதலாவ (2) ஆகிய தனிமைப்படுத்தும் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட மொத்தம் 32 நபர்கள் பேர் பி.சி.ஆர் பிசிஆர் பரிசோதனையின் பின்னர் இன்று 23 ஆம் திகதி தனிமைப்படுத்தல் சான்றிதல்களுடன் தங்களது வீடுகளுக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.

இன்று 23 ஆம் திகதியுடன் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 16,215 நபர்கள் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். தற்பொழுது முப்படையினரால் நிர்வகிக்கப்படும் நாடுபூராகவுமுள்ள 41 தனிமைப்படுத்தல் மையங்களில் 4,040 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

காலை (மு.ப. 6.00) மணியளவில் பிராண்டிக்ஸ் பூனானியில் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வெளிநாட்டவர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளை 28 தனிநபர்கள், 15 வெளிநாட்டை சேர்ந்த இலங்கையர்கள் மற்றும் 13 கடற்படை வீரர்கள் சுகமடைந்து இன்று 23 ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து தங்களது வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.Nike air jordan Sneakers | Nike Running