Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th June 2020 07:33:22 Hours

மும்பாயிலிருந்து 177 நபர்கள் இலங்கைக்கு வருகை

சென்னையிலிருந்து யூஎல்-1026 விமானத்தின் மூலம் இலங்கையைச் சேர்ந்த 53 பயணிகள் இன்று பகல் (17) ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தனர். அத்துடன் மும்பாயிலிருந்து இலங்கையை சேர்ந்த 177 பயணிகள் 6ஈ-9091 விமானத்தின் மூலம் இன்று (17) ஆம் திகதி இலங்கைக்கு வந்து சேரவுள்ளனர். இவர்கள் அனைவரும் முப்படையினரால் நிருவகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் தெரிவிக்கப்பட்டது.

வாதுவ ப்ளூ வாட்டர் ஹோட்டலிலிருந்து தனிமைப்படுத்தலின் பின்பு இரண்டு நபர்கள் பிசிஆர் பரிசோதனைகளின் பின்பு சுகாதார சான்றிதழக்ளுடன் தங்களது வீடுகளுக்கு இம் மாதம் (17) ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டனர். அத்துடன் என்று புதன்கிழமை (17) ஆம் திகதி முப்படையினரால் பராமரித்து வரும் தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து இது வரைக்கும் 14,393 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நாடாளவியல் ரீதியாக முப்படையினரால் பராமரித்து வரும் 40 தனிமைப்படுத்தல் மையங்களில் 4,124 நபர்கள் தனிமைப்படுத்தல் நிமித்தம் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை சென்னையிலிருந்த 05 பேரும், பங்களாதேசத்திலிருந்து வந்த (2) பேருக்கும் ஒரு கடற்படை ஒருவருக்கும் கொரோனா நேர்மறைவுக்கு இலக்காகியுள்ளனர் என்று ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ள 26 பேர்கள் பூரன குணமாகி இன்று (17) ஆம் திகதி மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளனர். இவர்களில் கடற்படையைச் சேர்ந்த 5 பேரும் உள்ளடங்குவார்கள்.

கடற்படையில் கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ள 900 நபர்களில் 768 பேர் பூரன குணமடைந்து பிசிஆர் பரிசோதனைகளின் பின்பு சுகாதார சான்றிதழ்களுடன் வெளியேறினார். மேலும் 132 கடற்படையினர் கொரோனா தொற்று நோய்க்கு இலக்காகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sportswear Design | Nike Air Max 270