Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th June 2020 13:50:28 Hours

உமா ஓயா திட்டத்திற்கு வரும் ஈரானியர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில்

பாகிஸ்தானில் இருந்து யூஎல் 1282 விமானத்தின் மூலம் இம் மாதம் (15) ஆம் திகதி வருகை தந்த 130 இலங்கையர்களில் 51 இராணுவ அதிகாரிகளும், 7 இராணுவ குடும்பத்தினரும் உள்ளடங்குவார்கள். இவர்கள் முப்படையினரால் நிர்வாகித்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்க வைக்கப்படுவார்கள் என்று ராஜகிரியவிலுள்ள கோவிட் – 19 தேசிய தடுப்பு நடவடிக்கை மையத்தின் அறிக்கை இம் மாதம் (15) ஆம் திகதி வெளியிடப்பட்டன.

தற்போது மேற்கொண்டு வரும் உமா ஓயா பல்நோக்கு மேம்பாட்டு திட்டத்திற்கு 85 ஈரானியர்கள் இன்று இலங்கைக்கு ஐஆர் – 5374 விமானத்தின் மூலம் வருகை தரவுள்ளனர். தற்பொழுது அவர்கள் நீர் கொழும்பில் உள்ள புளூ வோட்டர் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் அனைவரும் கரண்டகொல்லா சிறப்பு விடுதியில் தங்க வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.

மேலும் 222 நபர்கள் பூனானை ப்ரென்டிக்‌ஷில் (08) பேரும், சிடிஎஸ் அம்பாறையில் (29) பேரும், பல்வெஹரையிலிருந்து (88) பேரும், ஷெல்டன் ஹோட்டலில் (07) பேரும், 59 ஆவது படைப் பிரிவு பயிற்சி முகாமில் (90) பேரும், தனிமைப்படுத்தலின் பின்பு இம் மாதம் (15) ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்பு சுகாதார சான்றிதழ்களுடன் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது வரைக்கும் நாடாளவியல் ரீதியாக முப்படையினரால் பராமரித்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து 14,097 நபர்கள் தங்களது வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

அத்துடன் நாடாளவியல் ரீதியாக முப்படையினரால் பராமரித்து வரும் 43 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தற்போது 4,384 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இன்று மாலை வரைக்கும் கடற்படை வீரர்கள் கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர் என்று அறிக்கைகள் பதிவாகவில்லை என்றும் மருத்துவமனைகளில் கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியிருந்த 32 கடற்படையினர் மருத்துவமனையிலிருந்து பூரன குணமாகி தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். .

தற்போதைய நிலவரத்தின் பிரகாரம் கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ள 882 பேரில் 740 பேர் பூரன குணமாகி வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர் என்றும் இன்னும் 142 கடற்படையினர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளன. Adidas footwear | Air Jordan 1 Retro High OG Retro High OG Hyper Royal 555088-402 , Fitforhealth