Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th June 2020 13:45:28 Hours

மேலும் இலங்கையர்கள் வருகை கோவிட் மையம் தெரிவிப்பு

பாகிஸ்தானிலிருந்து யூஎல் – 1282 விமானம் மூலம் இன்று (15) ஆம் திகதி 130 பேர் இலங்கைக்கு வருகை தந்தனர். இவர்களில் 61 பேர் இலங்கை இராணுவ அங்கத்தவர்கள் ஆவார். இவர்கள் அனைவரும் முப்படையினரால் நிர்வாகித்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்க வைக்கப்பட்டு தனிமைப்படுத்தபடுவார்கள் என்று கோவிட் – 19 தேசிய தடுப்பு செயல்பாட்டு மையத்தின் அறிக்கையை இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட மையங்களான பூனானை ப்ரென்டிக்‌சிலிருந்த (08) பேரும், சிடிஎஸ் அம்பாறையிலிருந்த (29) பேரும், பல்வெஹரயிலிருந்த (88) பேரும், செல்டன் ஹோட்டலிருந்த (07) பேரும், 59 ஆவது படைப் பிரிவு பயிற்சி கல்லூரியிலிருந்த (90) நபர்களும், மொத்தமாக 222 பேர் தனிமைப்படுத்தலின் பின்பு இன்று (15) ஆம் திகதி சுகாதார சான்றிதழ்களுடன் தங்களது விடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுவரைக்கும் முப்படையினரால் பராமரித்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலுள்ள 13,875 பேர் தனிமைப்படுத்தலின் பின்பு சுகாதார சான்றிதழ்களுடன் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நாடாளவியல் ரீதியாக முப்படையினரால் பராமரித்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 4,387 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் இன்று காலை 6.00 மணிக்கு கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகி 5 கடற்படையினர் இனங்காணப்பட்டு இவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் பூரன சுகமாகி 4 கடற்படையினர் மருத்துவமனையிலிருந்து வெளியேறினர். .

தற்போதைய நிலவரப்படி, கடற்படையின் வீர மாலுமிகள் மொத்தம் 882 என்ற COVID-19 வைரஸ் நிலைக்கு சாதகமாக இருப்பதை உறுதிப்படுத்தினர். அவர்களில், 708 பேர் முழுமையான மீட்பு மற்றும் பி.சி.ஆர் சோதனைகளுக்குப் பிறகு மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பாதிக்கப்பட்ட 174 மாலுமிகள் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ள கடற்படையிலுள்ள 882 பேரில் 708 பேர் பூரன குணமாகி வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதுடன், மேலும் கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ள 174 கடற்படையினர் மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சையளித்து வருகின்றனர்.

இன்று (15) ஆம் திகதி இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க அவர்கள் ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கையின் வீடியோ காட்சிகளை இணையதளத்தில் காணலாம். Running sports | plain white nike air force ones women high top Colorways, Release Dates, Price , Gov