Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th June 2020 13:05:24 Hours

சிகிச்சை பெற்று வரும் 194 கடற் படை வீரர்கள் –நொப்கோ தெரிவிப்பு

ராஜகிரிய (149) மற்றும் நிப்புன பூசா (16) ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 165 நபர்கள் பிசிஆர் பரிசோதனையின் பின்னர் இன்று 13 ஆம் திகதி தனிமைப்படுத்தல் சான்றிதல்களுடன் தங்களது வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர் என்று ராஜகிரியவில் அமைந்துள்ள கொவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் சார்பாக 12 ஆம் திகதி இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க அவர்களினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று 13 ஆம் திகதியுடன் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 13197 நபர்கள் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

தற்பொழுது நாடுபூராகவுமுள்ள முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 44 தனிமைப்படுத்தல் மையங்களில் 4765 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

கட்டாரில் இருந்து வந்த ஒருவர் மற்றும் 2 கடற்படை வீரர்கள் உள்ளிட்ட மேலும் 3 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என இன்று காலை(மு.ப. 6.00) பதிவுசெய்யப்பட்டுள்ளது. 35 கடற்படை வீரர்கள் சுகமடைந்து இன்று வைத்தியசாலையில் இருந்து தங்களது வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

அதனடிப்படையில் இன்றுடன் கொவிட்-19 தொற்றுக்குள்ளான கடற்படையினரின் மொத்த எண்ணிக்கை 876 ஆகும், அவர்களில் குணமடைந்த 682 பேர் பிசிஆர் பரிசோதனையின் பின்னர் வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். தொற்றுக்குள்ளான 194 கடற்படை வீரர்கள் தற்பொழுது சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க அவர்களினால் இன்று காலை (13) ஆம் திகதி வெளியிடப்பட்ட குரல் பதிவு அறிக்கை பின்வருமாறு Sport media | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals